இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அந்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

லடாக் உரையில் மோடி இட்டுக்கட்டி பேசியுள்ளார் – எச்சரிக்கும் சீனா

நேற்று பிரதமர் மோடி லடாக்கில் ஆற்றிய உரைக்கு மறுப்பு தெரிவித்தும் இந்தியாவை எச்சரிக்கும் விதமாகவும் சீனா தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

narendra modi ladakh

இந்திய பிரதமர் மோடி நேற்று திடீரென லடாக் பயணம் மேற்கொண்டார். அங்கு வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் சீனாவை எச்சரிக்கும் விதமாகவும் பேசினார். அதில் ‘எல்லை ஆக்கிரமிப்பு சாகாப்தம் முடிந்தது இனி வளர்ச்சிக்கான நேரம்’ எனவும் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு சீன தற்போது பதில் அளித்துள்ளது.

‘சீனாவுக்கு எதிராக இராஜாங்க உறவு நிலையை இந்தியா தவறாக கணித்து விட்டது என்றும் மோடி அவர்களின் எல்லை விரிவாக்கம் குறித்த கருத்து மிகைப்படுத்தி இட்டுக்கட்டி கூறப்பட்டுள்ளது’ எனவும் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டெல்லி சீன தூதரக செய்தி தொடர்ப்பாளர் ஜி ரோங் தனது ட்விட்டர் பக்கத்தில், ” சீனா தன் எல்லை நாடான 14 நாடுகளில் 12 நாடுகளுடன் எல்லை விவகாரத்தை சுமூகமான பேச்சு வார்த்தையிலேயே தீர்த்து விட்டது. அதன் எல்லைகள் நட்பு ரீதியாக நல்லிணக்க முறையில் பிரிக்கபட்டு அங்கு அமைதியான சூழலே உள்ளது. எனவே சீனா எல்லை ஆக்கிரமிப்பு செய்வது என்ற செய்தி மிகைப்படுத்தி இட்டுக்கட்டி கூறப்பட்ட ஒன்று” என தெரிவித்துள்ளார்.

இதே போல் சீன வெளியுறவு துறை அமைச்சகம் கூறுகையில், ” மோடியின் இந்த லடாக் வருகை மூலம் இந்தியா எல்லை பிரச்சனையை சிக்கலாக்க முடிவு செய்துள்ளது. சீனாவும் இந்தியாவும் இராணுவ மற்றும் ராஜீய ரீதியில் தொடர்புடைய நாடுகள் என்பதால் இரு நாடுகளுக்கும் சிக்கலை தீர்க்கவே முயல வேண்டும்” என தெரிவித்துள்ளது.

மேலும் சீன வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், ” சீனாவை இந்தியா தவறாக கணக்கீடு செய்துள்ளது. இந்தியா சீனாவுடன் செய்த ஒப்பந்தத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் தேசத்தின் வளர்ச்சி போன்ற இன்றியமையாத கடமைகள் இருப்பதால் இந்த எல்லை பிரச்சனையை சிக்கலாக்குவது தவறு. இது இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் கேடு விளைவிக்கும்.

மேலும் செயலிகள் தடை போன்றவைகளால் இரு நாடுகளின் பொருளாதாரமுமே பாதிக்கப்படும் என்பதை இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும். சமீபத்திய இந்திய அரசியல் தலைவர்கள் சீனாவுக்கு எதிராக அளிக்கும் கருத்துக்கு சீனா கண்டனம் தெரிவிக்கிறது. இது இந்திய-சீனா நட்பை பாதிக்கிறது. இரு நாடுகளும் இணைத்து உலக வர்த்தக்கதில் உயர வேண்டும். இதற்கு அண்டை நாடுகளுடனான நட்புறவு தேவை. இந்த ஒத்துழைப்புக்கு எதிராக உலக வர்த்தக விதிகளை மீறுவது இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்ப்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.

1newsnationuser5

Next Post

ஊரடங்கிலும் உச்சத்தில் மையம் கொண்ட பெட்ரோல், டீசல்!

Sat Jul 4 , 2020
கடந்த சில தினங்களாக மாறாத பெட்ரோல், டீசல் விலை இன்றும் (04.07.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.72 காசுகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் இந்த விலையேற்றம் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்த போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றுவது பல சிறு குறு தொழில்முனைவோரை தான் அதிகம் பாதித்துள்ளது. பொருளாதார நெருக்கடி உள்ள […]
fuel price increase petrol diesel cars UK 913646 1

You May Like