தன் மனைவி தன் வீட்டின் முன் வேறொரு ஆணுடன் பேசிக்கொண்டிருந்ததால் விபரீதம் – துப்பாக்கியால் சுட்ட போலிஸ். உயிரோடு இருந்தவருக்கு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்த மருத்துவமனை – சவக்கிடங்கு ஊழியர்கள் அதிர்ச்சி வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..!

தீவிரமாகும் கொரோனா.. ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி என்ன சொன்னார் தெரியுமா..?

நாட்டில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், ஊரடங்கு உள்ளிட்ட தடை உத்தரவுகள் ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

modi meeting

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக,நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 24-ம் தேதி அமல்படுத்தினார். எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து கணிசமான அளவில் உயர்ந்தே வருகிறது. இந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் கட்சித் தலைவர்களிடமும் பிரதமர் மோடி உரையாடினார். ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 14-ம் தேதியுடன் முடித்துக் கொள்வது சாத்தியமில்லாத விஷயம் என்று மோடி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பேசிய பிரதமர் “ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதே அரசாங்கத்தின் முன்னுரிமை. நாட்டில் ஒரு ‘சமூக அவசரநிலை’ என்ற நிலை ஏற்பட்டுள்ளது, இதனால் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகி உள்ளது. நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் ” என்று பிரதமர் கூறினார்.

modi

கொரோனாவுக்குப் பிறகு வாழ்க்கை மீண்டும் ஒரே மாதிரியாக இருக்காது. வரக்கூடிய நாட்களில் கொரோனாவுக்கு முந்தைய வாழ்க்கை, கொரோனாவுக்கு பிந்தைய வாழ்க்கை என்று பிரிக்கக்கூடிய அளவுக்கு மாற்றம் இருக்கும். மிகப்பெரிய சமூக மற்றும் தனிப்பட்ட மாற்றங்கள் நிகழ வேண்டும்” என பிரதமர் பேசியதாக கூறப்படுகிறது.

21 நாள் ஊரடங்கு வரும் 14-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அதற்கு முன்பாக இந்த ஊரடங்கு நீடிக்குமா அல்லது தளர்த்தப்படுமா என்ற முடிவை பிரதமர் இந்த வாரத்தில் எடுப்பார் என்று தெரிகிறது. அதற்கு முன்பாக வரும் சனிக்கிழமை அன்று, பிரதமர் மோடி மீண்டும் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் உரையாற்ற உள்ளார்.

covid-19 corona

அதன்பிறகே ஊரடங்கு தொடர்பான முடிவை பிரதமர் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. நாட்டில் உள்ள பல மாநில அரசு தற்போது உள்ள ஊரடங்கை மத்திய அரசு நீட்டிக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

தமிழகத்தில் இன்று மட்டும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ; 690 லிருந்து 738 ஆக அதிகரிப்பு

Wed Apr 8 , 2020
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் இன்று மட்டும் 48 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பின் எண்ணிக்கை 690 லிருந்து 738 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த சுகாதாரப்பணியாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் இன்று மட்டும் 48 பேர் கொரோனா உறுதியானதை தொடர்ந்து பாதிப்பின் எண்ணிக்கை […]
samayam tamil 1 1

You May Like