திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா? இந்தாண்டு இறுதியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது..! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..! நீங்க என்ன "ஷோ" வேணாலும் பண்ணுங்க..! ஆனா நாங்க தான் நம்பர் 1..! பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கியடித்த சன் டிவி சீரியல்..! அது துரதிர்ஷ்டவசமானது…ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்காததற்கு இதுதான் காரணம்…தோனி விளக்கம்! சசிகலாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி…உற்சாகத்தில் அமமுகவினர்! இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..'

பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆலோசனை நிறைவு

கோவளம் ஓட்டலின் கண்ணாடி அறையில் சுமார் ஒரு மணி நேரம் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது.

China 4 1

இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின் பிங், நேற்று மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட்டார். அவருடன் பிரதமர் மோடி, தொல்லியல் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் வரலாற்று சிறப்பு மிக்க சின்னத்தின் பெருமைகளை எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து, கடற்கரை கோவில் வளாகத்தில் நடைபெற்ற இரவு விருந்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வண்ணம், சைவம் மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்ட சீன அதிபர் பலத்த பாதுகாப்புடன் சாலை மார்க்கமாக, கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்குச் சென்றடைந்தார்.

China 5

இதனைத் தொடர்ந்து, ஜின்பிங், ஓட்டலில் இருந்து காலை 9.40 மணியளவில், கோவளம் நோக்கி கிளம்பி சென்றார். வழி நெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டல் வந்த ஜின்பிங்கை, நீண்ட நேரமாக காத்திருந்து பிரதமர் மோடி வரவேற்றார். பரஸ்பரம் நட்பு பாராட்டும் வகையில் இருவரும் கைகுலுக்கி கொண்ட பின்னர், பேட்டரி கார் மூலம், ஓட்டல் வளாகத்தை சுற்றி பார்த்தனர்.

China 6

இதையடுத்து, தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் அமைக்கப்பட்டிருந்த அழகிய கண்ணாடி அறையில் இருநாட்டு தலைவர்களும், அதிகாரிகள் யாரும் இன்றி தங்களது மொழிபெயர்ப்பாளர்களுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையில் ராணுவம், பாதுகாப்பு, எல்லைப் பிரச்னை ஆகிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் கண்ணாடி அறையை விட்டு வெளியே வந்த இருநாட்டு தலைவர்களும், ஓட்டலில் இருந்த படியே கடற்கரையின் அழகை ரசித்தனர்.

அப்போது ஊடகங்களைச் சேர்ந்த புகைப்பட கலைஞர்களுக்கு இருநாட்டு தலைவர்களையும் புகைப்படம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருநாட்டு அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை நடைபெற உள்ள இடத்திற்கு, இருநாட்டு தலைவர்களும் பேட்டரி கார் மூலம் புறப்பட்டுச் சென்றனர்.

1newsnationuser2

Next Post

ட்விட்டரில் தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்…! பிகில் ட்ரைலர் இன்று வெளியீடு…!

Sat Oct 12 , 2019
தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெறித்தனமாக வெளியாக உள்ளது பிகில் படம். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகும் மூன்றாவது படம் இது. இதற்கு முன் வெளியான தெறி, மெர்சல் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதனையடுத்து இவர்களது கூட்டணிக்கென தனி ரசிகர்களே உருவாகிவிட்டனர். சமீபத்தில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா செம மாசாக நடைபெற்றது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பிகில் படத்தின் ட்ரெய்லர் […]
bugil trend

You May Like