உயிரை பறிக்கும் எமனாக மாறும்..இன்வர்ட்டர்.அதிர்ச்சி தகவல்… பெற்றோரை இழந்து தவித்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரக்கன்…சென்னையில் அதிர்ச்சி… ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. உடலுறவின் போது உயிரிழந்த நபர்.. ‘அதீத உச்சம்’ தான் காரணமாம்.. 16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்…

நாட்டு மக்களை குழப்பிய பிரதமர் மோடி..விளக்கமளித்த பிரதமர் அலுவலகம்

சீன ஊடுருவல் குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

gallerye 210914873 2560807 1

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே நடந்த மோதலைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிகளுடன் காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசிக்கப்பட்டது.

அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘இந்தியாவிற்குள் சீனப்படைகள் ஊடுருவவில்லை. ஊடுருவ முயன்றவர்களுக்குத் தக்கப் பாடம் கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நமது ஆயுதப் படைகள் மேற்கொள்ளும்’ என தெரிவித்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் ஆகியோர் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவவில்லை என பிரதமர் கூறுவது உண்மை என்றால், இருநாட்டு வீரர்களிடையே சண்டை நடந்தது ஏன்? இந்தியா ஏன் 20 உயிர்களை இழந்தது? என கேள்வி எழுப்பினர்.

இந்தியா - சீனா எல்லை

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. எல்லையில் நடந்த சண்டைக்கு பிறகு இந்திய பகுதிக்குள் சீன அத்துமீறல் இல்லை எனறு தான் அனைத்துக் கட்சி கூட்டத்தல் மோடி பேசியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

‘அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் நேற்று தெரிவித்த கருத்து தொடர்பாக சில தவறான தகவல் பரப்புகிறார்கள். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி உட்புக முயன்றால் இந்தியா பதிலடி கொடுக்கும், சீனாவின் முயற்சி பாதுகாப்பு படையினரின் துணிச்சலான செயலால் முறியடிக்கப்பட்டது என்றே பிரதமர் குறிப்பிட்டார்’ என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

1newsnationuser4

Next Post

கூலிப்படை உதவியோடு காதல் மனைவியை கடத்திய பெண் வீட்டார்; மீட்டுதரக்கோரி கணவர் புகார்

Sat Jun 20 , 2020
கோவை: கோவையில் காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை, அவரது பெற்றோர்கள் கூலிப்படை உதவியோடு தாக்குதலில் ஈடுபட்டு கடத்தி சென்றுவிட்டதாக பெண்ணின் கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கோவைமாவட்டம் இடையர்பாளையம் வித்யா காலனியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சக்தி தமிழினி பிரபா என்பவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கார்த்திக்கேயன் வீடு வசதியில்லாத குடும்பம் என்பதாலும், மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் […]
cbe love marriage 2

You May Like