உலகிலேயே பணக்கார கடவுள் யார்? சொத்து மதிப்பு எவ்வளவு தெரியனுமா? இத படிங்க இத மறந்துவிடாதீர்கள் டிசம்பர் 1 முதல் ATM-ல் பணம் எடுக்க கார்டு மட்டும் போதாது – இது ரொம்ப முக்கியம். இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்…

முதல்வரை புகழ்ந்து தள்ளிய கவிஞர் தாமரை..!

தமிழில் படித்தால் முன்னுரிமை என சட்டசபையில் சட்டதிருத்தம் கொண்டு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கவிஞர் தாமரை பாராட்டியுள்ளார்.
sudha
 
சட்டசபை கூட்டத் தொடரில் பள்ளி, பட்ட மேற்படிப்பை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பில் 20 % இட ஒதுக்கீடு வழங்கப்படும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதை அமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் கவிஞர் தாமரை ‘அடித்து ஆடுகிறார் எடப்பாடியார். தமிழ்வழியில் கற்றவர்களுக்கு, அரசுப் பணிகளில் முன்னுரிமை எனும் அறிவிப்பு, விழா எடுத்துக் கொண்டாட வேண்டிய நிகழ்வு. தமிழ் உணர்வாளர்கள் காதுகளில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது இன்று.
 
தமிழ்நாட்டில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் எனும் நிலை வர வேண்டும் !
 
தமிழ் மக்களுக்கான சேவைகள் அனைத்தும் முதன்மையாக தமிழில் வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் மட்டுமே அறிந்தவர்களுக்கு எந்த மொழிச்சிக்கலும் இல்லா வண்ணம் நடத்தப்படுவதே சிறந்த மக்களாட்சி !.
 
இது சிலருக்குக் கசப்பாக இருக்கக் கூடும்.’தமிழ்நாட்டில் தமிழ்’ என்றுதானே கேட்கிறோம். ஆந்திராவில் தமிழ், கர்நாடகத்தில் தமிழ்,கேரளத்தில், ம.பி, உ.பி, பஞ்சாப், ஹரியானாவில் ஆட்சிமொழி தமிழென்றா கேட்கிறோம். அப்புறம் ஏன் கசக்க வேண்டும்.
 
வந்தாரை வாழ வைக்கும் தமிழகமே. நம் உரிமைகளை விட்டுக் கொடுத்துவிட்டு, யாரையும் வாழ வைக்க வேண்டிய அவசியம் நமக்கில்லை என அறிக. 
 
நம் மொழிப்பற்றை, மொழி வெறியாகத் திரித்தால் அது திரிப்பவர்களின் பிரச்சினை, நம் பிரச்சினையில்லை.
 
பி.கு : அப்படியே இந்த வங்கிப்பணி, தொடர்வண்டி சேவை, விமானநிலையம் உள்ளிட்ட அனைத்திலும் தமிழை, தமிழரை உறுதிப்படுத்துக. தமிழ்நாட்டிலிருந்து கிளம்பும்/அடையும் அனைத்து வானூர்திகளிலும் தமிழ் அறிவிப்புகள் ஒலிக்க வேண்டும். உங்களால் முடியும் முதல்வரே !. அடித்து ஆடுங்கள்” என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

1newsnationuser4

Next Post

கொரோனா எதிரொலி.. சென்னை தி.நகரில் உள்ள கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு..

Tue Mar 17 , 2020
கொரோனா பரவுதலை தடுக்க சென்னை தி.நகரில் உள்ள கடைகளை மூடுவதற்கு சென்னை மாநகாராட்சி உத்தரவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக் கல்லூரிகள், வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றை மார்ச் 31-ம் தேதி வரை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தளங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அதிகமாக வெளியில் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையின் அதிக […]
t nagar

You May Like