இன்ஸ்ட்டா அக்கவுண்ட்டை ‘ஹேக் செய்து வீடியோ காலுக்கு’ நிர்வாணமாக வரச் சொல்லி அழைத்த பொறியியல் பட்டதாரி கைது!

சிறுமிகளின்  இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை ஹேக் செய்து அவர்களை நிர்வாணமாக வீடியோ காலிற்கு அழைக்கும் தொழில்நுட்ப  சைக்கோவை  ஆந்திர மாநில போலீசார் இரண்டு வருடங்களுக்குப் பின் கைது செய்திருக்கின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு  ஆந்திர பிரதேச மாநிலத்தில் ரச்சகொண்டா  சைபர் கிரைம் பிரிவில் 17 வயது சிறுமி ஒருவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில் தனக்கு யார் என்று அறிமுகம் இல்லாத ஒரு நபர்  தனது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டி வருவதாகவும் அப்படி செய்யாமல் இருக்க தன்னை நிர்வாண வீடியோ காலுக்கு வரும்படி கட்டாயப்படுத்துவதாகவும் அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தார் சிறுமி. அந்த நேரத்தில் தேவையான தகவல்களை பெற்றுக் கொண்ட காவல்துறை அந்த மர்ம ஆசாமிக்கு வலை விரித்து  காத்துக் கொண்டிருந்தது. இதனை எப்படி அறிந்து கொண்ட அந்த நபர்  தன்னுடைய சிம் கார்டு மற்றும் செல்போன் போன்ற ஆதாரங்களை அழித்துவிட்டு  தலைமறைவாகி விட்டான். ஆனாலும் காவல்துறை அவனைப் பற்றிய விவரங்களை  திரை மறைவில் தொடர்ந்து சேகரித்துக் கொண்டே இருந்தது.

இந்த தகவல்களின் அடிப்படையில் தற்போது  அந்த நபரை கைது செய்து இருக்கிறது போலீஸ். இது தொடர்பாக காவல்துறை தரப்பிலிருந்து தற்போது தகவல்களை வெளியிட்டு இருக்கின்றனர் அதன்படி ” ஆந்திர மாநிலம்  என்டிஆர் மாவட்டத்திலுள்ள இப்ராஹிம் பட்டினத்தைச் சார்ந்த 27 வயதான பொறியியல் பட்டதாரி தான்  இதுபோன்ற சமூக  விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்திருக்கிறது. அந்த இளைஞரின் பெயர் ஜி. மனோஜ்  வயது 27. பொறியியல் பட்டதாரியான இவர்  அந்தப் பகுதியில் உள்ள செங்கல் சூளையில்  மேற்பார்வையாளராக பணியாற்றிக் கொண்டிருந்திருக்கிறார்.

காவல்துறையினரின் தகவலின்படி ஆபாசத்திற்கு அடிமையான அந்த இளைஞர்  போலியான ஒரு கணக்கை தொடங்கி அதில் சில பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றி  அதன் மூலம் பெண்களுக்கு நட்பு அழைப்பு விடுத்து  அவர்களிடம் பெண்களைப் போலவே நன்றாக பேசிப் பழகி  தகவல்களை பரிமாறிக் கொள்வார் . இதன் மூலம் அவர்களிடம் நன்றாக பழகி அவர்களது நம்பிக்கையை  பெற்ற பின்  தான் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு இணைப்பின் மூலம் அந்தப் பெண்களின் இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து  அதில் இருக்கும் சாட் ஹிஸ்டரி மற்றும் புகைப்படங்களை எடுத்து அவற்றை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டுவார். இந்த விஷயங்கள் வெளியே தெரியாமல் இருக்க வேண்டுமானால் தன்னுடன் நிர்வாணமாக வீடியோ காலுக்கு வருமாறு  மிரட்டி இருக்கிறார் அந்த இளைஞர். மேலும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை  அந்தப் பெண்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே வெளியிடப் போவதாகவும் மிரட்டி இருக்கிறார். அப்படி செய்யாமல் இருக்க தன்னுடன் நிர்வாணமாக வீடியோ கால் வருமாறு  பெண்களையும் மிரட்டி வந்திருக்கிறார்  இந்நிலையில் ஹைதராபாத் சார்ந்த ஒரு சிறுமிக்கும்  இதே போல்  மிரட்டல் விடுத்திருக்கிறார். அந்தத் தகவல்களை வைத்தே  அவரைக் கண்டுபிடித்து கைது செய்ததாக அறிவித்திருக்கிறது ஆந்தர காவல்துறை . குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் கைது செய்யப்பட்டு  திங்கள் கிழமை முதல் நீதிமன்ற காவலில் இருந்து வருவதாக  அறிவித்திருக்கிறது ஆந்திர போலீஸ் .

Baskar

Next Post

கண்ணை மறைத்த கள்ளக்காதல்! நண்பனின் பிஞ்சு குழந்தைகளை கொன்ற இளைஞர்!

Thu Feb 9 , 2023
திருவள்ளூர் அருகே இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு  ஒரு பெண்ணை அறிவாளால் வெட்டி படுகாய படுத்திய  வட மாநிலத்தைச் சார்ந்த இளைஞரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது  இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாநிலத்தைச் சார்ந்தவர் குட்டுலு வயது 25  இவர் திருவள்ளூர் பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த ஜெகநாதபுரம் சத்திரம் பகுதியில் வீடு வாடகைக்கு […]

You May Like