சென்னையில் 2 லட்ச ரூபாய் கடனை அடைப்பதற்காக ஜாகுவார் காரை திருடிய காவலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

அண்ணாநகர், 5வது அவென்யூ, ஏசி பிளாக், குடியிருப்பில் வசிப்பவர் பாலசுப்ரமணியன். பிரபல தனியார் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் உள்ள இவர் நிறுவனம் சாரப்பில் வழங்கப்பட்ட சொகுசு ரக கார் ஆன ஜாக்குவாரை பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் காணவில்லை என, பாலசுப்ரமணியன் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதைத்தொடர்ந்து, விசாரணையை மேற்கொண்ட போலீஸார் ஜாக்குவார் காரைப் பொறுத்தவரை அனைத்து டிரைவர்களாலும் அதை ஓட்ட முடியாது என்பதால் திருடப்பட்ட காரை யாரெல்லாம் ஓட்டுவார்கள் என்ற விவரத்தை பாலசுப்பிரமணியத்திடம்விசாரித்துள்ளனர். பின்னர், பாலசுப்பிரமணியத்தின் டிரைவரிடம் போலீஸார் விசாரித்தபோது அந்த பகுதியில் காவலாளியாகப் பணியாற்றும் ஜெயராமனும் இந்த காரை சில நேரங்களில் ஓட்டுவார் என்ற தகவலைக் கூறியுள்ளார்.

மேலும், சில தினங்களுக்கு முன்பாக திருடப்பட்ட ஜாக்குவாரின் காரின் சாவி, காணாமல் போன தகவலையும் அந்த சமயத்தில் காவலாளி ஜெயராமன் அங்கு இருந்தார் என்றும் டிரைவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸார் ஜெயராமனை பிடித்து விசாரித்தபோது, ஜாக்குவார் காரைத் திருடி நான் என்ன செய்யப்போகிறேன் சார்?’ என்று போலீஸாரிடம் கூறியுள்ளார்.
இதனிடையே, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, ஜாக்குவார் காரை திருடிக்கொண்டு செக்யூரிட்டி ஜெயராமன் செல்லும் காட்சிகள் கிடைத்தத்துள்ளன. அந்த காட்சிகளை ஜெயராமனிடம் போலீஸார் காண்பித்ததை தொடர்ந்து, காரைத் திருடியதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அம்பத்தூர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஜாக்குவார் காரை போலீஸார் மீட்டனர். காரைத் திருடிய வழக்கில் செக்யூரிட்டி ஜெயராமனை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து அண்ணாநகர் போலீஸார் கூறுகையில், `வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயராமன் வேலைக்காகச் சென்னை வந்த நிலையில் கிடைத்த வேலைகளைச் செய்துவந்துள்ளார். பாலசுப்பிரமணியன் தங்கியிருக்கும் குடியிருப்புப் பகுதியில் செக்யூரிட்டி ஜெயராமன் பணியாற்றியுள்ளார். அப்போது பாலசுப்பிரமணியன் காரில் செல்லும் போது அவருக்கு சல்யூட் மற்றும் காரின் கதவைத் திறந்துவிடுவது போன்ற வேலைகளைச் செய்துள்ளார்.
அதனால் பாலசுப்பிரமணியன், ஜாக்குவார் காரை ஓட்ட ஜெயராமனுக்கு அனுமதியளித்துள்ளார். சில நேரங்களில் பாலசுப்பிரமணியத்தை ஜாக்குவார் காரில் அழைத்துக் கொண்டு ஜெயராமன் சென்றுள்ளார். முதலில் காரின் சாவியைத் திருடிய ஜெயராமன், பின்னர் தன்னுடைய 2 லட்சம் ரூபாய் கடனுக்காக காரைத் திருடியுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்