இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

ஊரடங்கை மீறியவர்களை தட்டிக்கெட்ட காவல்துறையினர் மீது கொடூர தாக்குதல்.. காவலர் ஒருவரின் கை வெட்டப்பட்டதால் அதிர்ச்சி..

பஞ்சாபில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினரை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில், காவலர் ஒருவரின் கைகள் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

punjab police

கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வரும் 14-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், பல்வேறு ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்துள்ளன. வெளிநாடுகளில் பஞ்சாப் திரும்பிய நபர்கள் காரணமாக அம்மாநிலத்திலும் கொரோனா பரவத் தொடங்கியது. இதுவரை அங்கு 151 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே அம்மாநிலத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று முதலமைச்சர் அமரேந்தர் சிங் அறிவித்தார்.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள மார்க்கெட் ஒன்றில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஊரடங்கை உறுதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது 6 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது.

இதில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஹர்ஜீத் சிங் என்பவரின் கை வெட்டப்பட்டது. மேலும் இரு காவலர்கள் இதில் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட ஹர்ஜித்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே இந்த தாக்குதல் சம்பத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் தொடர்புடைய மற்ற நபர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று, உரிய நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

1newsnationuser1

Next Post

மும்பை தாஜ் ஓட்டலின் ஆறு ஊழியர்களுக்கு கொரோனா அறிகுறி உறுதி...

Sun Apr 12 , 2020
மும்பை தாஜ் ஓட்டலில் பணிபுரியும் ஊழியர்களான 6 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் காட்டுத்தீ போல் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பல்லாயிர உயிர்களை கொன்று குவித்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், மும்பை தாஜ் ஓட்டலின் ஊழியர்களான 6 பேருக்கு கொரோனா வைரஸின் அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் […]
Mumbai Taj-hotel-six-employees-Corona-sign-determination

You May Like