சென்னையில் கல்லூரி மாணவனை கடத்திச் சென்ற வழக்கில் 9 மாணவர்கள் அதிரடி கைது…..!

முன்பெல்லாம் ரவுடிசம் என்றால் அந்த ரவுடிசத்தை செய்வதற்கு ஒரு தனி குழு இருக்கும். ஆனால் தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தங்களுடைய படிக்கும் வேலையை விட்டுவிட்டு தங்களுடைய கல்லூரியிலேயே ரவுடிசத்தை செய்ய தொடங்கி இருப்பது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது.

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரிஸ்வான் (19) இவர் ராயப்பேட்டையில் இருக்கின்ற நியூ முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். முன்தினம் கல்லூரி முடிவடைந்த பிறகு இவர் தன்னுடைய நண்பர்களுடன் 25g பேருந்தில் ஏறி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

கோடம்பாக்கம் ஹைரோட்டில் உள்ள பாம்கிரோவ் பேருந்து நிலையம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது மாநில கல்லூரியைச் சேர்ந்த 25 மாணவர்கள் அந்த பேருந்து ஏறி கூச்சலிட்டுக் கொண்டே வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பிறகு அவர்கள் பேருந்தில் பயணம் செய்த நியூ கல்லூரி மாணவர்களை மிரட்டி அவர்களிடமிருந்த அடையாள அட்டையை பறித்துக் கொண்டு அராஜகம் செய்ததாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் ரிஸ்வானை மட்டும் மிரட்டி பேருந்து விட்டு இறக்கிக் கொண்டு, அவரை பல பேருந்துகளில் கடத்திச் சென்று சுற்ற விட்டு போரூர் பகுதிக்கு அழைத்து சென்றதாகவும், அங்கே அவரை மற்ற மாணவர்கள் மிரட்டி அடித்து அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகின்றது. இது தொடர்பாக ரிஸ்வான் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் வழங்கிய நிலையில், காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதன் பிறகு கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவான முக அடையாளங்களை கொண்டு தனிப்பட்ட அமைப்பு அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நியூ கல்லூரி மாணவனை தாக்கிய 9 மாநில கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட இவர்கள் வடபழனியைச் சேர்ந்த முகமது முஸ்தபா, அருண், கீர்த்தன், தனுஷ் உட்பட 9 பேர் என்பது தெரியவந்தது.

இவர்கள் மீது கடத்தல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல், காயம் ஏற்படுத்துதல், கலகம் செய்தல் போன்ற 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு துறையினர் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Next Post

Gold Rate..!! தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடி குறைவு..!! நகைப்பிரியர்கள் நிம்மதி..!!

Fri Feb 10 , 2023
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 43 ஆயிரம் ரூபாய்க்கும் கீழே குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர். சென்னையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.5,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து 42,560 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 60 ரூபாய் குறைந்து 5,804 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த வாரம் பட்ஜெட் தாக்கலுக்குப் […]

You May Like