நரபலி கொடுக்க இருந்த சாமியார்! போராடிக் காப்பாற்றிய காவல்துறை – நாகர்கோவிலில் நடந்த திக் திக் சம்பவம்!

நாகர்கோவில் அருகே  நரபலி கொடுக்க இருந்த குழந்தையை கடைசி நேரத்தில் காவல் துறை காப்பாற்றிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும்  அதே நேரம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாகர்கோவில் பகுதியைச் சார்ந்தவர் கண்ணன் இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி அகிலா இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு மகனும்  இரண்டு வயதில் ஒரு மகளும் உள்ளனர். கண்ணன் ஐடி நிறுவனத்தில் சென்னையில் பணி புரிவதால் அவர்கள் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை  உறவினர் வீட்டில் திருமணத்திற்காக அவர்கள் குடும்பத்துடன் சென்னையில்  இருந்து சொந்த ஊர் திரும்பினர். தக்கலையில் நடந்த திருமணத்தை முடித்துவிட்டு  அகிலாவின் தந்தை வீட்டிற்கு வந்து  அங்கு தங்கி இருந்தனர். இரவு நேரம் என்பதால் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது திடீரென அவர்களது இரண்டு வயது மகள் சஸ்விகா காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக எங்கு தேடியும் அவர் கிடைக்காததால்  இரவோடு இரவாக காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த காவல்துறை அவர்களுடன் இணைந்து குழந்தையை தேடும் பணியை தொடங்கியது. கிணறு புதர்கள் என ஒரு இடம் விடாமல்  இன்று தேடியும் கிடைக்கவில்லை. மேலும் அப்பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளிலும் குழந்தை பதிவாகாததால்  மிகுந்த பதற்றத்துடன் தேடிக் கொண்டிருந்தனர். மேலும் குழந்தையை கண்டுபிடிக்க வேண்டும் என்ற  விவேகத்துடன் ஒவ்வொரு வீடாக சென்று சோதனை நடத்தியுள்ளனர். அந்த நேரத்தில்  அவர்கள் இருந்த வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள  தென்னந்தோப்பில் சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்த போது அங்கு ஒரு வீட்டில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனை அடுத்து அங்கு சென்ற போலீசார் அந்த வீட்டின் கதவை தட்டினர் அப்போது திறக்கப்படவில்லை  இதனால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த காவல்துறையினருக்கு  அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாமியார் ஒருவர் காணாமல் போன  குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு  ஏதோ பூஜைகள் செய்து கொண்டிருந்தார். உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கிய காவல்துறையினர்  குழந்தையை  அவரிடமிருந்து  மீட்டு  அந்த சாமியாரையும் கைது செய்தனர்.

இது தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்  அவரது பெயர் ராசப்பன் (68) என்பதும்  அவர் ஒரு மந்திரவாதி என்றும் தெரியவந்துள்ளது.  மனைவி  மற்றும்  குழந்தைகள் இறந்த நிலையில் அவர் இது போன்ற மாந்திரீக வேலைகளில்  ஈடுபட்டு  வந்திருக்கிறார். அந்த வழியாக சென்றபோது  நகையுடன் இருந்த குழந்தையை பார்த்தவர் அந்தக் குழந்தையை கடத்தி  நரபலி கொடுக்க  இந்தப் பகுதிக்கு அழைத்து வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்த முயற்சியை  காவல்துறை  வெற்றிகரமாக  முறியடித்து  குழந்தையும் காப்பாற்றி விட்டனர்.

Baskar

Next Post

பெண் காவலருக்கு கன்னத்தில் பளார்! ஆக்கிரமிப்பு குப்பை அகற்றத்தின் போது பதற்றம்!

Fri Feb 10 , 2023
விழுப்புரம் அருகே ஆக்கிரமிப்பு குப்பையை அகற்ற சென்ற காவலருக்கு அடி கிடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. விழுப்புரம் அருகே உள்ள மேல்மலையனூர் பகுதி  அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற காவலரை மூதாட்டி ஒருவர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டம்  செக்கடி குப்பம் என்ற கிராமத்தில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற சந்திரசேகர் என்பவர் கொடுத்த புகாரை தொடர்ந்து  வட்டாட்சியர் அலெக்சாண்டர் தலைமையில்  அந்த ஊர் […]

You May Like