பரபரப்பு…! சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு “வில் சின்னம்”..! தேர்தல் ஆணையம் அதிரடி…!

மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சியையும், அதன் சின்னமான கட்சியின் வில் அம்பையும் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் சுமார் எட்டு மாதங்களுக்கு பிறகு, இந்தியத் தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டே அணி, சிவசேனா என்ற கட்சியின் பெயரையும் வில் அம்பு சின்னத்தையும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இது மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் அதன் 78 பக்க உத்தரவில், சிவசேனாவின் தற்போதைய அரசியலமைப்பு “ஜனநாயக விரோதமானது” என்று எடுத்துக்காட்டி உள்ளது.

மகாராஷ்டிராவில் 2022-ம் ஜூன் மாதம் சிவசேனா கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது. அக்கட்சியின் மற்றொரு தரப்பான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள் பெரும்பான்மையை நிரூபித்ததன் அடிப்படையில் புதிய அரசு பதவியேற்றது. ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்றார். இவரது தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது.

மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகிய 2 தரப்பும் கட்சியின் வில் மற்றும் அம்பு சின்னத்திற்காக வழக்குகள் தொடுத்தும், தேர்தல் ஆணையத்தை நாடியும் வந்தன. இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சியையும், அதன் சின்னமான கட்சியின் வில் அம்பையும் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதோடு கட்சியின் விதிகள் மற்றும் பெரும்பான்மையின் அடிப்படையில் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

பிளாஸ்டிக் மறுசுழற்சியில் கருப்பு கண்ணாடி தயாரிப்பு! ஆஷாயா நிறுவனம் அசத்தல்!

Sat Feb 18 , 2023
தூக்கி எறியப்படும் சிப்ஸ் பாக்கெட் கவர்களில் இருந்து (Sunglasses) கருப்பு கண்ணாடிகளை தயாரித்து புனேவை தளமாக கொண்ட ஆஷாயா நிறுவனம் அசத்தியுள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை மறுசுழற்சி செய்வதற்கான வழிகளை கண்டறிய முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் சிப்ஸ் பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்து கருப்பு கண்ணாடிகளை (Sunglasses)புனேவை […]

You May Like