ஜோதிகா நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான படம் பொன்மகள் வந்தாள். இந்தப்படம் வெளியான சில மணிநேரங்களிலேயே HD தரத்தில் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகியிருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது,

சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பார்த்திபன், பிரதாப் போத்தன், பாக்யராஜ், பாண்டியராஜன், தியாகராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ’பொன்மகள் வந்தாள்’.

கொரோனா ஊரடங்கு காரணமாக பல படங்கள் வெளியீட்டுக்கு காத்து கொண்டுள்ளன. மீண்டும் திரையரங்கம் திறக்கப்பட்டாலும் பழைய படி மக்கள் திரையரங்கத்துக்கு வருவார்களா என்பது சந்தேகம் தான். ஏனெனில் இந்த ஊரடங்கில் பலரும் அமேசான், ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளத்தில் படம் பார்த்து பழகிவிட்டனர். அதனால், ஒரு முடிவெடுத்த பொன்மகள் வந்தாள் படக்குழு படத்தை அமேசான் பிரைம்-க்கு நல்ல விலைக்கு விற்றது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், அந்தப்படம் இன்று வெளியிடப்பட்டது. படம் ஓடிடியில் சொன்ன அதே நேரத்தில் வெளியானது. ஆனால், படம் வெளியான சில மணி நேரங்களில் HD தரத்துடன் தமிழ்ராக்கர்ஸிலும் வெளியானதே இங்கு பெரும் பஞ்சாயத்து.

ஒருவேளை படம் திரையரங்கில் வெளியானால், செல்போன் கேமரா மூலம் பதிவு செய்து அது தமிழ்ராக்கர்ஸில் வெளியில் படத்தில் கிளாரிட்டி இருக்காது. பல நாட்களுக்கு பின்னரே நல்ல தெளிவான படம் கிடைக்கும். ஆனால், இதுபோன்ற ஓடிடி தளத்தில் வெளியாகும் போது முதல் நாளே HD தரத்துடன் படம் தமிழ்ராக்கர்ஸ் தளத்தில் வெளியாகிறது. இது ஓடிடி தளத்தில் படம் வெளியிட நினைக்கும் அனைத்து சிறு தயாரிப்பாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.