ஓ.டி.டி.யில் வெளியாகின்றது ’பொன்னியின் செல்வன்’… பார்க்க முடியும் !! ஆனா முடியாது!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் நவம்பர் 4ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த மாதம் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 500 கோடி ரூபாய் வசூலை ஈட்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்ற ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ஓடிடியில் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.

இதன் நிலையில் சற்று முன் அமேசான் பிரைம் வீடியோ தனது சமூக வலைத்தளத்தில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நவம்பர் 4 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவித்துள்ளது. ஆனால் இந்த படத்தை பார்க்க சப்ஸ்கிரைப் செய்த வாடிக்கையாளர்களாக இருந்தாலும் வாடகை செலுத்த வேண்டும் என்று அறிவித்து உள்ளதால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

புதிய திரைப்படங்களை பார்ப்பதற்காகத்தான் சப்ஸ்கிரைப் செய்கிறோம் என்றும் ஆனால் ஒரு சில குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் வாடகை கேட்பது எந்த விதத்தில் நியாயம் என்றும் வாடிக்கையாளர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் மட்டுமே வாடகை அடிப்படையில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ஹிந்தி மொழியில் ’பொன்னியின் செல்வன்’ எப்போது ஓடிடியில் ரிலீஸாகும் என்று அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

நாள் முழுவதும் அடிக்கடி காஃபி அருந்துவதற்கு பதிலாக ஆரோக்கியமான கிரீன் டீ அருந்துவது நல்லது.

Mon Oct 31 , 2022
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், குடல் ஆரோக்கியம் சீராக இருக்க வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி முதல் மன ஆரோக்கியம் வரை, உங்கள் உடலை பல்வேறு வியாதிகளிலிருந்து பாதுகாக்கிறது.  எனவே உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும். மேலும் உங்கள் அன்றாட வாழ்க்கை முறையில் நீங்கள் செய்யும் சில மாற்றங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதற்கு நீங்கள் தினமும் என்ன செய்ய வேண்டும் என்பது […]

You May Like