இளநரை, முதுநரை இரண்டிற்கும் இந்த எண்ணையை தேய்த்து பாருங்க..! கருமையான முடி வளரும்..! இளம்பெண் வெறொரு நபரை பார்த்ததால் ஏற்பட்ட பொறாமை.. ஆத்திரத்தில் இளைஞர் செய்த வெறிச்செயல்.. தோனி மட்டும் இதை மட்டும் மாத்துனாருனா போதும்.. சிஎஸ்கே மீண்டும் ஃபார்ம்க்கு வந்துவிடும்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் கூறிய அட்வைஸ்.. ரிஷப் பண்ட்டை அணியில இருந்து தூக்கிட்டு இவர போடுங்க.. சும்மா தெறிக்க விடுவாரு…! மரணத்திற்கு பிறகு என்ன நடக்கிறது.. மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம்.. மருத்துவ ரீதியாக இறந்த நபர் கூறிய தகவல்கள்.. கணவர் அடிக்கடி ஷூட்டிங் செல்வதால், வேறொருவருடன் ஷூட்டிங் நடத்திய மனைவி..! மனைவிக்கும், தாய்க்கும் சிலை வைத்து கோவில் கட்டிய தொழிலதிபர்..! நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! பழிவாங்கும் நடவடிக்கையா? இந்த மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் பத்தாம் வகுப்பு படித்த பெண் டாக்டர் கைது..! கணவரை தொடர்ந்து மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி..! மருத்துவமனையில் சிகிச்சை..! “என்னை முதல்வராக்குனது ஜெயலலிதா.. ஆனால் உங்கள..” ஓபிஎஸ் – இபிஎஸ் நேரடி மோதல்.. உச்சத்தை எட்டிய முதல்வர் பதவி சண்டை.. 'ஒத்த செருப்பிற்கு கிடைத்த கெளரவம்' ரசிகர் தவறவிட்ட செருப்பை கையால் எடுத்துக் கொடுத்த தளபதி..! முதல்வர் வேட்பாளர் யாருன்னு இன்னக்கே முடிவெடுங்க.. அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் காரசார விவாதம்.. தொடரும் குழப்பம்.. இனி வாகன ஆவணங்களை நேரில் காட்ட வேண்டிய அவசியம் இல்லை..!

வந்தியத்தேவனை இந்த முறையாவது வெள்ளித்திரையில் காண முடியுமா..? பொன்னியின் செல்வன் நாவலும், திரை பிரபலங்களின் கனவுகளும்..

பொன்னியின்

1950-களில் வெளிவந்த கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவல், 70 ஆண்டுகளை கடந்தும் இன்றளவும் வாசகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சோழர்களின் வீர வரலாற்றை பற்றி பேசும் இந்த நாவலை எத்தனை முறை படித்தாலும், முதன்முறை படிப்பது போல உணர்வை தரும்.. விறுவிறுப்பான கதை, அந்த நாவலில் இடம்பெற்றுள்ள சுவாரஸ்யமான கதாப்பாத்திரங்கள், கல்கியின் சலிப்பூட்டாத எழுத்து ஆகியவை நம்மை சோழர் காலத்திற்கே அழைத்து செல்லும் என்றால் அது மிகையாகாது.. கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம் என்றாலும் பொன்னியின் செல்வன் வாழ்ந்த நிகழ்கால வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றி சுழல்வதாக அமைந்தது.


இந்த நாவலில் வல்லவரையன் வந்தியத் தேவன், அருள்மொழி வர்மன் என்கிற இராஜராஜ சோழர், ஆழ்வார்க்கடியான் நம்பி (ஒற்றர்), குந்தவை பிராட்டியார் (ராஜராஜ சோழனின் சகோதரி) பெரிய பழுவேட்டரையர், நந்தினி, சின்ன பழுவேட்டரையர், ஆதித்த கரிகாலர், சுந்தர சோழர், செம்பியன் மாதேவி, மந்தாகினி, கடம்பூர் சம்புவரையர், சேந்தன் அமுதன், பூங்குழலி, குடந்தை சோதிடர், வானதி, மந்திரவாதி ரவிதாஸன் (பாண்டியனுடைய ஆபத்துதவிகளின் தலைவன்) கந்தமாறன்(சம்புவரையர் மகன்), மணிமேகலை (சம்புவரையர் மகள்), அநிருத்த பிரம்மராயர், மதுராந்தக சோழர் என பல முதன்மை கதாப்பாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. இவை தவிர மேலும் பல கதாப்பாத்திரங்களும் இடம்பெற்றுள்ளன.

images 6

இந்த நாவலுக்கு சோழ மன்னனான ராஜ ராஜ சோழனை குறிக்கும் வகையில் பொன்னியின் செல்வன் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தாலும், கதையின் நாயகன் என்று வல்லவரையன் வந்தியதேவனை கல்கி அறிமுகம் செய்வார். வந்தியத்தேவன் கதாபாத்திரத்தினை வீரமுள்ள துடிப்பான இளைஞனாகவும், முன்யோசனையின்றிச் செயலில் இறங்குபவனாகவும், குந்தவை மீதான காதலில் இன்புறுபவனாகவும் கல்கி வடிவமைத்துள்ளார். ஆதித்த கரிகாலனின் நண்பர்களில் ஒருவனாகவும் துாதுவனாகவும் வந்தியத் தேவன் அறிமுகம் ஆகிறான்.

vandiya devan

தனது அவசர புத்தியால் வந்திய தேவன் ஆபத்தில் சிக்கும் போதெல்லாம், அவன் எப்படியாவது மீண்டு வரவேண்டும் என்ற எண்ணமே நம்மை அறியாமல் ஆட்கொண்டிருக்கும். இப்படி ஒரு ஒரு கதாப்பாத்திரத்திற்கு ஒரு ஒரு தனித்தன்மை இருக்கும். முதல் பாகத்தில் இருந்து இறுதிப்பாகம் வரை வந்தியத்தேவனை சுற்றியே கதை நகர்வதைக் காணலாம். எனவே இது படமாக உருவாக போகிறது என்று தகவல் வெளியானவும், வந்திய தேவனை திரையில் காணப் போகிறோம் என்ற ஆர்வமே பொன்னியின் செல்வன் படித்தோருக்கு எழுந்த எண்ணமாக இருந்தது.

ஆனால் இப்படிப்பட்ட விறுவிறுப்பான பொன்னியின் நாவலை படமாக எடுக்க வேண்டும் என்று ஆசைப்படாத திரைப் பிரபலங்களே இல்லை என்று கூட சொல்லலாம். எம்.ஜி.ஆர்., பாரதிராஜா, கமல்ஹாசன், மணி ரத்னம் என பல திரையுலக ஜாம்பவான்கள் பொன்னியின் செல்வனை படமாக்க வேண்டும் என்று விரும்பினர். ஆனால் பலருக்கும் அது நிறைவேறாத கனவாகவே மாறிவிட்டது. இயக்குனர் மகேந்திரனிடம் பொன்னியின் செல்வன் படத்தை படமாக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் கேட்டுக் கொண்டார். அதற்கான பணிகளை மகேந்திரன் தொடங்கிய நிலையில், ஒரு சில காரணங்களால் அது கைவிடப்பட்டது.

mgr mahendran

அதன்பின்னர் எம்.ஜி.ஆர் தனது வாழ்க்கையின் கடைசி நாட்களில் கூட மீண்டும் அந்த முயற்சியை மேற்கொண்டார். கமல்ஹாசனை வைத்து, பொன்னியின் செல்வனை படமாக்க வேண்டும் பாரதி ராஜாவிடம் கேட்டார். ஆனால் அதன் பிறகு ஒரு சில நாட்களில் எம்.ஜி.ஆர் இறந்துவிட்டாதால், அதுவும் கைவிடப்பட்டது. பிறகு 90-களில் கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் பொன்னியின் செல்வன் உருவாக உள்ளதக கூறப்பட்டது. ஆனால் பட்ஜெட் காரணமாக பின்னர் கைவிடப்பட்டது.

kama maniatnam

அதன்பிறகு பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப் படமாக கருதப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் பணிகள் கடந்த 2015-ஆண்டு தொடங்கப்பட்டன. விஜய், மகேஷ் பாபு, சத்யராஜ், ஆர்யா உள்ளிட்ட பல நடிகர்களை பிரதானமாக வைத்து இப்படத்தை இயக்க மணிரத்னம் முடிவு செய்தார். மேலும் விக்ரம், சூர்யா, விஷால், அனுஷ்கா உள்ளிட்ட நடிகர்களையும் நடிக்க வைக்க மணி ரத்னம் திட்டமிருந்தார்.

விஜய், மகேஷ் பாபு ஆகியோரை வைத்து போட்டோ ஷூட்டும் நடத்தப்பட்டது. முதற்கட்ட படப்பிடிப்பை மைசூர் பேலஸ், லலிதா மஹால் ஆகிய இடங்களில் நடத்த, அனுமதி கோரப்பட்டது. ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மீண்டும் பட்ஜெட் பிரச்சனை காரணமாக படம் கைவிடப்பட்டது.

vijay mahesh babu mani

இவை எல்லாவற்றையும் கடந்து மீண்டும் பொன்னியின் செல்வன் படப் பணிகளை மணி ரத்னம் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கினார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, பிரபு, சரத்குமார், ரஹ்மான், கிஷோர் , த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், ரியாஸ் கான், ஷொபிடா துலிபாலா என நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது.

அதாவது கதையின் நாயகன் வந்தியத் தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும், ஆதித்த கரிகாலனாக விக்ரமும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லக்ஷ்மியும், ஆழ்வார்க்கடியனாக ஜெயராமும், கந்த மாறனாக அஸ்வினும் நடிக்க உள்ளனர். கடந்த ஜனவரி மாதம், பாடலாசிரியர் இல்லாத பட்டியலை படக்குழு வெளியிட்டது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ள நிலையில், ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். இதனால் பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறாரா இல்லையா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்தது. ரோஜா படத்தில் தொடங்கிய மணிரத்னம் – ஏ.ஆர் ரஹ்மான் – வைரமுத்து கூட்டணி பொன்னியின் செல்வன் படத்தில் தொடருமா என்ற கேள்வியும் உள்ளது.

ponniyin

மெகா பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. 2.0 படத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை 2 பாகங்களாக உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்திலும், இந்த ஆண்டு, பிப்ரவரி 2-ம் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியிலும் நடைபெற்றது.

அதற்குள் கொரோனா பரவத் தொடங்கியதால், மற்ற படங்களை போலவே பொன்னியின் செல்வன் படத்தின் பணிகளும் நிறுத்தப்பட்டன. எனினும் ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் மீண்டும் படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் புனே, ஹைதராபாத் ஆகிய இடங்களில் படத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ponniyin selvan

இந்தியாவின் அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான பொன்னியின் செல்வம் படம் வெளியாவது உறுதியாகி உள்ளது. மணிரத்னம் இயக்கி வரும் படம், பொன்னியின் செல்வன் நாவலை எப்படி நம் கண்முன் கொண்டு வரப் போகிறது.. என்ற கேள்வி இருந்தாலும், மற்றொருபுறம் இப்படம் எப்போது வெளியாகும், அதனை வெள்ளித்திரையில் எப்போது பார்க்க போகிறோம் என்ற ஆர்வம் தான் அதிகமாக இருக்கிறது. ஆனால் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தை போலவே, இன்னும் ஓரிரு ஆண்டுகள் அதற்காக நாம் காத்திருக்க வேண்டும்..!!

1newsnationuser1

Next Post

வருமான வரி கட்டுபவர்களா நீங்கள்..? கண்டிப்பா இத படிங்க..!

Tue Aug 18 , 2020
அதிக மதிப்பிலான பண பரிவர்த்தனைகளை குறித்து வருமான வரிக்கணக்கு தாக்கல் படிவத்தில் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில நாட்களுக்கு முன் ரூ.2௦,௦௦௦க்கு மேல் வரும் ஓட்டல் பில், வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கு மேல் வரும் மின்கட்டணம், ரூ.1 லட்சத்துக்கு மேல் வாங்கும் நகை போன்ற சிலவற்றை வருமான வரித்துறை கணிக்கும் என நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது. இதனால் பெரும் பரபரப்பு நிலவிய நிலையில் […]

You May Like