வழுக்கை தலையில் முடி வேகமாக வளர வேண்டுமா? அப்படினா இத யூஸ் பண்ணுங்க..! அதுவும் இயற்கை முறையில்..! நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி நிவர் புயலை பற்றி இணையத்தில் பகிரப்பட்டு வரும் புதுக்கவிதை முழுமையாக கரையை கடந்த நிவர் புயல் குரூப்-2 நேர்முக தேர்வை ஒத்திவைப்பு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது? லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சை வீடியோ..! விஷாலின் திருமணத்திற்கு தடையாக இருந்தது இந்த நடிகையா?

ஊரடங்கு உத்தரவின் நேர்மறை தாக்கம்.. தூய்மையானது கங்கை..

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கங்கை நதியின் தரம் உயர்ந்துள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

ganga river

கொரோனா பெருந்தொற்று நோய் நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 24-ம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் 130 கோடி மக்களும் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கங்கை நதியின் தரம் உயர்ந்துள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

அந்த வாரியம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, கங்கை நதி பாயும் வழிகளில், 36 இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 27 இடங்களில் குளிப்பதற்கும், நீர் வாழ் உயிர்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கும் தகுந்த நதியாக கங்கை மாறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நதியின் தரம், நிறம் இரண்டும் மேம்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஊரடங்கு பிறப்பிக்கப்படும் முன்பு வரை உத்தரகண்ட் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் ஒரு சில இடங்களை தவிர, மற்ற இடங்களில் கங்கை நதி குளிப்பதற்கு உகந்ததாக இருக்காது. இதனால் மத்திய அரசு கங்கை நதி தூய்மை திட்டத்திற்காக பல ஆண்டுகளாக கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கி செயல்பட்டு வருகிறது. எனினும் இந்த திட்டங்களால் சுத்தமாகாத கங்கை தற்போது கொரோனா காரனமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் தூய்மையாகி உள்ளது.

ganga river

தினமும் சராசரியாக 3000 முதல் 4000 பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடுவர். ஆனால் ஊரடங்கால் தற்போது யாரும் வெளியே வர முடியாததால் பழைய துணிகள், கழிவுகள் உள்ளிட்ட எதுவும் இன்றி நதி அமைதியாக செல்கிறது.

பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வழியாக கங்கை நதி தூய்மையாகி விட்டதாக கூறும் அதிகாரிகள், கங்கை நதியின் தரம் மேம்பட்டுள்ளது, அதனை மீண்டும் மீட்டெடுக்க முடியும் என்பதற்கான அறிகுறிகள் என்று தெரிவித்துள்ளனர்.

1newsnationuser1

Next Post

“கைதட்டுவதும், டார்ச் அடிப்பதும் மட்டுமே போதாது..” கொரோனா விவகாரத்தில் மோடியை விமர்சித்த ராகுல்காந்தி..

Sat Apr 4 , 2020
கைதட்டுவதாலும், டார்ச் அடிப்பதாலும் மட்டுமே பிரச்சனையை தீர்க்க முடியாது என்று கொரோனா விவகாரத்தில் மத்திய அரசை ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ கோவிட்-19-க்கு எதிரான போராட்டத்தில், இந்தியா போதிய அளவு கொரோனா பரிசோதனை செய்யவில்லை. மக்களை கைதட்ட செய்வதும், வானத்தில் டார்ச் அடிக்க சொல்வது மட்டுமே பிரச்சனையை தீர்க்கப்போவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கொரோனா பரிசோதனை […]
ராகுல்காந்தி

You May Like