கோழிகளுக்கு பரவும் நோய்… உடனே இந்த தடுப்பூசி போட வேண்டும்…! இல்லை என்றால் உயிருக்கு ஆபத்து…!

கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கோழிகளுக்கு இருவார கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; இராணிகட் என்னும் வெள்ளைக்கழிச் நோய் கோழிகளில் நச்சுயிரியால் ஏற்படும் தொற்று நோய் ஆகும். இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளில் வெள்ளை அல்லது பச்சை கழிச்சல், மூச்சுத்திணறல், நடுக்கம், வாதம் மற்றும் தீவனம் உட்கொள்ளும் அளவு குறைதல் ஆகியவை ஏற்படும். இந்நோய் பாதித்த சில கோழிகள் தலையை இரண்டு கால்களுக்கு இடையில் செருகிக் கொள்ளும். இதனால் இதனை கொக்கு நோய் என்றும் கூறுவர். கோழிகளில் இறப்பும் ஏற்படும்.

சேலம் மாவட்டத்தில் கோழிகளில் ஏற்படும் வெள்ளைக் கழிச்சல் நோயினை கட்டுப்படுத்த தமிழக அரசின் உத்தரவின்படி, கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கோழிகளுக்கு இருவார கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் 01.02.2024 முதல் 14.02.2024 வரை நடைபெறுகிறது. இம்முகாம்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து புறக்கடை கோழிகளுக்கும் வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி இலவசமாக போடப்படும். இத்திட்டத்தினை செயல்படுத்த 4,372 இலட்சம் டோஸ்கள் வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி மருந்து பெறப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் கோழி வளர்ப்போர் அனைவரும் அருகில் உள்ள கால்நடை நிலையங்களில் அவர்களது 8 வாரம் முதல் 12 வாரங்களுக்கு மேற்பட்ட கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி போட்டு தங்களது கோழிகளை நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

1newsnationuser2

Next Post

நோட்...! குரூப் 4 தேர்வுக்கு நாளை முதல் இலவச பயிற்சி வகுப்பு ஆரம்பம்...! எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா...?

Tue Feb 6 , 2024
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 07.02.2024 அன்று தொடங்கப்படவுள்ளது. இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) குரூப் 4 அடங்கிய பணிக் காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பபட்டுள்ளது. இத்தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்பு சேலம், ஏற்காடு சாலை, கோரிமேடு பகுதியில் […]

You May Like