உஷார் மக்களே… தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலத்திற்கு டெங்கு எச்சரிக்கை…! நடவடிக்கைக்கு மத்திய அரசு உத்தரவு…!

கொசு ஒழிப்பு நடவடிக்கையை மக்கள் இயக்கமாகத் தொடங்க வேண்டும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.

வீடுகள், வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் கொசுக்கள் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய மக்களையும், சமுதாயங்களையும்  ஈடுபடுத்தும் வகையில், அவர்களது பங்கேற்புடன் மக்கள் இயக்கங்களைத் தொடங்குமாறு உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், டெல்லி, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.  கொசு ஒழிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற மக்களின் பங்கேற்பு முக்கியமானது. சுற்றுப்புறங்களில் கொசு  இனப்பெருக்கம் இல்லை என்பதை உறுதிப்படுத்த, நமது சொந்த வீடுகள் மற்றும் சமூகங்களுடன் தொடங்குவோம் என கொசு மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தயார்நிலையை ஆய்வு செய்தபோது மத்திய சுகாதார அமைச்சர் கூறினார்.

கொசு கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்கு பல துறைகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பு தேவை. பூச்சிக்கொல்லிகள், மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் போன்றவற்றுடன் மருந்துகள்/நோயறிதல்கள் சரியான நேரத்தில் கிடைப்பதையும், பயனுள்ள விநியோகத்தையும் உறுதிசெய்யவும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சிஎஸ்ஓக்கள், ஆதரவு ஏஜென்சிகள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும் வகையில் மைக்ரோ-திட்டங்கள் மூலம் காலக்கெடு முடிவுகளுடன் பணியாற்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், பரிந்துரைத்தார். “விழிப்புணர்வு மேம்பாடு, சமூக அணிதிரட்டல் மற்றும் உபகரணங்கள், மருந்துகள் மற்றும் பிற சேவைகளை வழங்குவதற்காக ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை வீடு வீடாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவோம் என்று அவர் கூறினார்.

மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, யானைக்கால் போன்ற பல்வேறு தொற்று நோய்களின் மாநில வாரியான எண்ணிக்கை  குறித்து மாநிலங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் அதிக அளவில் பரவியுள்ள மாத வாரியான பருவநிலையும் வழங்கப்பட்டது. இந்த நோய்களைக் கட்டுப்படுத்த இந்திய அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் மலேரியாவையும், 2030-ம் ஆண்டுக்குள்  நிணநீர்க் கொதிப்பு நோயையும் ஒழிக்கும் இலக்கைக் கொண்டுள்ளது என்றார்.

Also Read: ரேஷன் அட்டையில் திருத்தம்…! இன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை மட்டுமே…! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!

Vignesh

Next Post

தமிழக அரசு சார்பில் படித்து வேலை இல்லாதவர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை…! விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

Sat Jul 9 , 2022
படித்து வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின்‌ சார்பில்‌ படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும்‌ திட்டம்‌ செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மாதம்‌ ஒன்றுக்கு SSLC தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, SSLC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக்கல்வி (12ம்‌ வகுப்பு) படித்தவர்களுக்கு ரூ.400-ம்‌, பட்டதாரிகளுக்கு, ரூ.600 வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு SSLC மற்றும்‌ அதற்கு கீழ்‌ படித்தவர்களுக்கு ரூ.600, மேல்நிலைக்கல்வி […]

You May Like