குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் நீலகிரி பயணம் திடீர் ரத்து.. என்ன காரணம்..?

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் நீலகிரி பயணம் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது..

குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு திரௌபதி முர்மு முதன்முறையாக 2 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார்.. நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த அவர், கோயில் வளாகத்தை சுற்றி பார்வையிட்டார்.. பின்னர் மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சென்றார்.. கோவையில் உள்ள ஈஷோ யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றார்.. இதனை தொடர்ந்து கோவையில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் அவர் தங்கி இருந்தார்..

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி செல்வதாக பயணத்திட்டம் இருந்தது.. குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளியில் நடைபெறும் விழாவில் அவர் கலந்துகொள்வார் என்று கூறப்பட்டது.. இந்நிலையில் திரௌபதி முர்முவின் குன்னூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது..

மோசமான வானிலை காரணமாக, பயணம் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. மேகமூட்டம், சாரல் மழை காரணமாக குடியரசு தலைவரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.. இதனை தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் இருந்து மதியம் 12.15 மணியளவில் தனி விமானம் டெல்லி செல்ல உள்ளார்..

Maha

Next Post

“ இந்தியா மிக விரைவில் இந்து ராஷ்டிரமாக மாறும்..” பிரபல சாமியார் உறுதி..

Sun Feb 19 , 2023
இந்தியா மிக விரைவில் இந்து ராஷ்டிரமாக மாறிவிடும் என்று பிரபல சாமியார் திரேந்திர சாஸ்திரி தெரிவித்துள்ளார்.. மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் பகேஷ்வர் தாம் சர்க்கார் என்ற புகழ்பெற்ற மடத்தின் பீடாதிபதிபதியாக உள்ளவர் திரேந்திர சாஸ்திரி.. பிரபல சாமியாராக கருதப்படும் திரேந்திர சாஸ்திரி, தொடர்ந்து இந்தியாவை இந்து ராஷ்டிரா என்று அழைத்து வருகிறார்.. இந்நிலையில் ஏ.என்.ஐ நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர் “ இந்தியா ‘இந்து ராஷ்டிரா’ ஆகிவிடும். வெளிநாட்டில் உள்ளவர்கள் […]

You May Like