ஆங்கில மருந்துகளை காட்டிலும் நமக்கு எளிதாக கிடைக்கக் கூடிய சப்பாத்திக்கள்ளி பழம் ஆண்மை, கருத்தரித்தல் போன்ற பல்வேறு குடும்ப விருத்தி பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமையும் என இயற்கை மருத்துவர்கள் தெரிவிவிக்கின்றனர்.

கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற சத்துக்களும் உயர்தரமான நார்சத்தும் நிறைந்துள்ள இந்த பழத்தை பறித்ததும்அப்படியே சாப்பிடமுடியாது.
அந்த பழத்தின் மேல் கண்ணுக்கு தெரியாத பூமுள் ஆயிரக்கணக்கில் இருக்கும். அதனால் துணியில் எடுத்து அந்த பழத்தை தரையில் உள்ள கல்லில் தேய்த்து மேலே உள்ள முள்ளை போக்கவும்.பின் கவனமாக பழத்தை பிரித்தால் உள்ளே, நட்சத்திர வடிவில் தொண்டை முள் இருக்கும். அப்படியே சாப்பிட தொண்டையில் அந்த முள் சிக்கி அதிக சிரமத்தை தரும்.
அந்த தொண்டைமுள்ளை எடுத்து வெளியே போட்டு விடவும். பின் மெதுவாக உள்ளே உள்ள பழத்தை சாப்பிட அதிக விதையும், நல்ல இனிப்பு சுவையும், நல்ல சிவப்பு நிறமும் கலந்து இருக்கும்.
இதை சாப்பிட இதயம் சீராக துடிக்கும். ஆணுக்கு அனுக்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு கரு முட்டை நன்றாக வளரும். கருவுற்ற பெண்கள் இந்த பழம் சாப்பிட்டால் குழந்தை நல்ல சிவப்பு நிறத்துடனும், நல்ல கோபம், ரோசத்துடனும் இருக்கும்.
இந்த பழம் சாப்பிட ஆண்மை அதிகரிக்கும். கருப்பை சுத்தம் ஆகும். நீர்கட்டி தானாக அழியும். எல்லோருக்கும் நல்லது செய்யும் பழம் இது.

மேலும், சப்பாத்திகள்ளி பழத்தை சாப்பிட்டு வந்தால் குரல்வளை, பித்தப்பை, மலக்குடல் சார்ந்த அனைத்து குறைபாடுகளும் நீங்கும். காச இருமல், இரத்தம் குக்குதலும் தீரும். ஞாபக மறதி எனப்படும் அல்ஸைமர் நோய்க்கு இது மருந்தாக பயன்படுத்தலாம். இந்த பழத்தை தொடர்ந்து எடுத்துக்கொள்ளவதால் கண் பார்வை கூர்மையாகிறது.
சப்பாத்திக் கள்ளி பழத்தில் உள்ள உயர்தரமான நார்ச்சத்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றி உடல் பருமனை குறைக்கிறது. சப்பாத்திக்கள்ளியை நன்கு பசையாக்கி சிறிது விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கம், வலி கண்ட இடத்தில் மேற்பூச்சாகப் பூசி வைக்க விரைவில் வீக்கம் வற்றும். வலியும் விலகும்.