“ இலங்கை அதிபருக்கு ஏற்பட்ட அதே கதி தான் பிரதமர் மோடிக்கும்..” திரிணாமுல் எம்.எல்.ஏ கருத்து..

இலங்கை அதிபருக்கு ஏற்பட்ட கதியை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க நேரிடும்: திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ இட்ரிஸ் அலி தெரிவித்துள்ளார்..

கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ இட்ரிஸ் அலி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ இலங்கை அதிபருக்கு என்ன நடந்ததோ, அது இங்கே பிரதமர் மோடிக்கும் நடக்கும். இந்தியாவில் உள்ள விஷயங்களைப் பார்க்கும்போது, பிரதமர் மோடி இது ஒரு முழுமையான தோல்வி… அது இங்கே இன்னும் மோசமாக இருக்கும். பிரதமர் மோடியும் ராஜினாமா செய்துவிட்டு ஓடிவிடுவார்” என்று தெரிவித்தார்..

வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. எனினும் தற்போது வரை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் கோட்டபய பதவி விலக வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, மாணவர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.. இதனால் இலங்கையில் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், தற்போது அதிபரின் செயலகம், அதிபர் மாளிகை போராட்டக்கார்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச அதிபர் மாளிகையைவிட்டு தப்பியோடிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

எச்சரிக்கை! 30 நிமிடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால்... உடல் எடை அதிகரிக்கலாம்..

Mon Jul 11 , 2022
ஐநாவின் புதிய அறிக்கையின்படி இந்தியாவில் உடல் பருமன் பிரச்சனை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.. 1.38 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட உடல் பருமனுடன் வாழும் பெரியவர்களின் எண்ணிக்கை 34.3 மில்லியனாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் வயது வந்தோர் எண்ணிக்கையில் 2012 இல் 3.1 சதவீதமாக இருந்த உடல் பருமன் பாதிப்பு 3.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், உலக உடல் பருமன் கூட்டமைப்பு, 2030 ஆம் ஆண்டில் இந்தியாவில் 27 […]

You May Like