மிஸ் பண்ணிடாதீங்க… வேலை இல்லாத நபர்களுக்கு… இன்று காலை 10 மணி முதல்…! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!

தனியார்‌ துறை நிறுவனங்களும்‌ – தனியார்‌ துறையில்‌ பணிபுரிய விருப்பம்‌ உள்ள மனுதாரர்களும்‌ கலந்துக்கொள்ளும்‌ தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌ ஒவ்வொரு மாதத்தின்‌ இரண்டாம்‌ மற்றும்‌ நான்காம்‌ வெள்ளிக்கிழமைகளில்‌ நடைபெறுகிறது .எனவே, தனியார்துறை நிறுவனங்கள்‌ தங்களுக்குத்‌ தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்‌. இது ஒரு இலவசப்பணியே ஆகும்‌.

மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000..! குழப்பங்களை தீர்த்த பின்..! வெளியான முக்கிய தகவல்..!

இதன்‌ மூலம்‌ தனியார் துறையில்‌ வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. அரசுத்துறைகளில்‌ அவர்களது பதிவு மூப்பின்படி நேர்முகத்‌ தேர்வு அனுப்பப்படும்‌. எனவே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில்‌ பதிவு செய்துள்ள நபர்கள்‌ தனியார்துறையில்‌ வேலைக்கு சென்றால்‌ அவர்களது பதிவு இரத்து செய்யப்படமாட்டாது.

இம்முகாமில்‌ பல்வேறு தனியார்‌ நிறுவனங்கள்‌ கலந்து கொண்டு விற்பனையாளர்‌, மார்க்கெடிங்‌ எக்ஸ்க்யூட்டிவ்‌, சூப்பர்வைசர்‌, மேலாளர்‌, கம்ப்யூட்டர்‌ ஆப்பரேட்டர்‌, தட்டச்சர்‌, அக்கவுண்டன்ட்‌, கேசியர்‌, மெக்கானிக்‌, போன்ற பணிகளுக்கு தேர்வு செய்ய உள்ளனர்‌. டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும்‌ பள்ளிப்படிப்பு முடித்த ஆண்‌, பெண்‌, மூன்றாம்‌ பாலினத்தவர்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ உட்பட அனைத்துவித கல்வித்தகுதிக்கும்‌ ஆட்கள்‌ தேவை என தனியார்த்துறை நிறுவனங்கள்‌ தெரிவித்துள்ளன.

ஆகவே, மேற்படி பணிகளுக்கு தகுதியும்‌, விருப்பம்‌ உள்ளநபர்கள்‌ அனைவரும்‌ இன்று காலை 10 மணி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ நடைபெறவுள்ள தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக்‌ கொண்டு பயன்‌ பெறலாம்.

Vignesh

Next Post

பீர்க்கங்காயால் கிடைக்கும் சத்துக்கள் நம் உடலில் செய்யும் அற்புதம்…!!

Fri Oct 28 , 2022
பீர்க்கங்காயில் வைட்டமின் சி, துத்தநாகம், இரும்பு, ரிபோஃப்ளோ வின், மெக்னீசியம், தயாமின் உள்ளிட்ட அனைத்துச் சத்துகளும் இதில் உள்ளன. இது இன்னும் ஏராளமான நன்மைகளை நமக்கு வழங்குகிறது. பீர்க்கங்காயில் ஏற்கனவே குறைந்த கலோரிகள் காணப்படுகின்றன. இதில் நார்ச்சத்துக்கள் அதிகளவு காணப்படுகிறது. கொழுப்பை சரியாக ஜீரணித்து உறிஞ்சும்  உணவு இழைகளால் நிரம்பியுள்ளது. பீர்க்கங்காயை சாப்பிட்டால் வயிறு நிரம்பிய எண்ணம் தோன்றும். அதனால் நீங்கள் நொறுக்கு தீனிகளை வாங்கி சாப்பிட மாட்டீர்கள். இதனாலேயே […]

You May Like