சினைப்பை புற்றுநோயும்… அதன் ஆரம்பகால அறிகுறிகளும்..!!

சினைப்பை புற்றுநோயின் அறிகுறிகளை நாம் கவனிக்காமல் அசட்டையாக இருந்துவிடக் கூடாது. இவை நம் உடலை அமைதியாக தாக்கக்கூடியது. நோயின் கடைசி கட்டத்திலேயே நம்மால் கண்டுபிடிக்க முடியும்.

பெண்களுக்கு சினைப்பை புற்றுநோய் என்பது மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சினைப்பைக்குள் வளரும் அதிகப்படியான செல்கள் நமது உடலுக்குள் சென்று ஆரோக்கியமான செல்களை அழிக்கிறது. மாதவிடாய் சுழற்சி முடிவடைந்த பெண்களிடத்தில் இது பரவலாக காணப்படுகிறது. அதற்காக இளம் பெண்களுக்கு இந்நோய் வராது எனக் கூற முடியாது. தங்கள் உடலை ஆரோக்கியமாக பராமாரிக்கவிட்டால் எந்த வயது பெண்களையும் சினைப்பை புற்றுநோய் தாக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். சினைப்பை புற்றுநோயின் பல அறிகுறிகள் மற்ற பொதுவான நோய்களின் அறிகுறிகள் போல் இருப்பதால் நாம் இதில் கவனக்குறைவாக இருந்துவிடுகிறோம். இதுவே பெண்களுக்கு உயிர்க்கொல்லி நோயாகவும் அமைந்துவிடுகிறது. இந்த சினைப்பை புற்றுநோய் ஒருவரை தாக்குவதற்கு மரபணு, சுற்றுச்சூழல், ஹார்மோன் எனப் பல காரணிகள் இருக்கிறது.

ஆபத்து காரணிகள்: பெண்களின் வயது முக்கியமான காரணமாகும். 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களைதான், அதுவும் குறிப்பாக மாதவிடாய் சுழற்சி நிறைவடைந்த பெண்களை சினைப்பை புற்றுநோய் அதிகமாக தாக்குகிறது. இதற்கு முன் உங்கள் குடும்பத்தில் யாருக்காவது கருப்பை, மார்பகம் அல்லது பிற புற்றுநோய்கள் இருந்தால், உங்களுக்கும் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதுவும் BRCA1 மற்றும் BRCA2 மரபணுவில் திரிபுகள் இருந்தால் உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடிய ஆபத்து அதிகமாகும்.

தனிப்பட்ட மருத்துவ வரலாறையும் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக உங்களுக்கு மார்பக புற்றுநோய் அல்லது பெருங்குடல் மற்றும் கருப்பை புற்றுநோய் இருந்தால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பமாகாத பெண்கள் அல்லது 35 வயதிற்கு மேல் கர்ப்பமானவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். மிக இளவயதிலேயே மாதவிடாய் தொடங்கிவிடுவது அல்லது மிகவும் தாமதமாக மாதவிடாய் சுழற்சி நிறைவடைவது போன்றவையும் சினைப்பை புற்றுநோயின் ஆபத்தை அதிகரிக்கும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் தொடர்ச்சியாக இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறுங்கள். ஆரம்பத்திலேயே சினைப்பை புற்றுநோயை கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் எளிதில் குணமடையலாம்.

சினைப்பை புற்றுநோயின் அறிகுறிகள்: சினைப்பை புற்றுநோயை அமைதியான உயிர்க்கொல்லி என்று கூறுகிறார்கள். ஏனென்றால் இந்த நோய்க்கு ஆரம்ப அறிகுறிகள் என்று எதையும் சொல்ல முடியாது. இருந்தாலும், சில குறிப்பிட்ட அறிகுறிகளை நாம் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

1) அடிக்கடி வயிறு உப்புசம், வலி அல்லது இடுப்பு பகுதியில் அசௌகர்யமாக உணர்கிறீர்களா? அப்படியென்றால் இதுவும் ஒரு அறிகுறி

2) அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என தோன்றுகிறதா? அல்லது அடிக்கடி சிறுநீர் வருகிறதா? இல்லாவிட்டால் சிறுநீர் கழித்த பிறகும் சிறுநீர்ப்பையில் முழுமையாக இருப்பது போல் தோன்றுகிறதா? அப்படியென்றால் இதுவும் ஆரம்ப அறிகுறிதான்.

3) பசியின்மை காரணமே இல்லாத வகையில் அஜீரணம், குமட்டல் போன்றவையும் நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

4) விவரிக்க முடியாத வகையில் சோர்வாக இருக்கும். ஓய்வெடுத்தாலும் சரியாகாதது போலவே இருக்கும். இதையும் ஆரம்ப அறிகுறியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

5) சில பெண்களுக்கு உடலுறவின் போது வலி உண்டாகும்; அசௌகரியமாக உணர்வார்கள் இதுவும் ஒரு அறிகுறி

6)திடீரென மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்படுவது அல்லது ஒழுங்கற்ற முறையில் வருவது போன்றவையும் அறிகுறிகளாக இருக்கலாம்.

7) காரணமே இல்லாமல் நாள்பட்ட முதுகு வலி இருந்தாலும் சினைப்பை புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

Read More: பெண் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த Zomato CEO!

Baskar

Next Post

ஏர் இந்தியா முக்கிய அறிவிப்பு...! 3 மணி நேரம் விமானம் லேட் ஆனால் கட்டணம் திரும்ப பெறலாம்...!

Fri May 10 , 2024
ஏர் இந்தியா பணியாளர் வேலைநிறுத்தம் காரணமாக சேவையில் ஏற்படும் இடையூறுகள் குறித்து பயணிகளின் கடும் கோபத்திற்கு ஆளாகினர். பயணிகள் தனது விமானத்தை ரத்து செய்யலாம் அல்லது மூன்று மணிநேரத்திற்கு மேல் தாமதமாகிவிட்டால், முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம் அல்லது எந்த கட்டணமும் இல்லாமல் பயணத்தை மறு தேதிக்கு மாற்றலாம் என்று கூறியுள்ளது. விமான பணியாளர்கள் எதிர்ப்பால் சேவை முடங்கியதை அடுத்து இந்த அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் […]

You May Like