கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தால் பாலியல் தொழில்கள் நலிவடைந்து வரும் சூழலில் தொழில் நுட்பத்தை கையில் எடுத்துள்ளனர் இளம் பாலியல் தொழிலாளர்கள்.

வீடியோ கால் மற்றும் செக்ஸ் சேட் என வாடிக்கையாளர்களை சந்திக்கும் இவர்கள், கூகிள் பே மற்றும் பேட்டியம் போன்ற வகையில் வருமானம் பார்க்கின்றனர். இதில் கிடைக்கும் வருமானம் சொற்பம் தான் என்றாலும் பசியும் வறுமையும் இவர்களை செய்ய தூண்டுகிறது. அரசாங்கம் அளிக்கும் பொது நிவாரணம் மூன்று மாதங்கள் வருமா என்பது கேள்வி குறி தான். இதனால் தொழில்நுட்பத்தை எளிதில் அணுக கூடிய இளம் தலைமுறையினரே இதை உபயோகித்து வருகின்றனர்.

இருப்பினும் கொரோனாவின் நன்மையில் இதுவும் ஒன்றாக உள்ளது. ஏனெனில் மாஸ்க் செய்து விற்ப்பது, கோழி,மீன் வளர்ப்பு போன்ற பணிகளிலும் இவர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றி வருகின்றனர். பாலியல் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டாலும் நல்வாழ்வு ஏற்ப்படுத்தி தர வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கையாக உள்ளது.