இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

புதுப்பேட்டை 2..? ஆயிரத்தில் ஒருவன் 2..? செல்வராகவனின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

என்.ஜி.கே படத்தை அடுத்து, மீண்டும் நடிகர் தனுஷை வைத்து புதுப்பேட்டை 2 படத்தை இயக்க உள்ளதாக இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

dhanush and selvaraghavan

செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான படம் புதுப்பேட்டை. இந்தப் படத்தில் சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். படம் வெளியான போது, வசூல் ரீதியில் இப்படம் பெரிதாக வெற்றியடையவில்லை என்றாலும், பின்னாளில் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. எனவே படம் வெளியான போது குறைத்து மதிப்பிடப்பட்ட படங்கள் பட்டியலில் புதுப்பேட்டையும் இணைந்தது.

இதனைத் தொடர்ந்து செல்வராகவனிடம் சமூக வலைதளங்களிலும், அவர் கலந்துகொள்ளும் விழாக்களிலும் முக்கியமாக இரண்டு படங்கள் குறித்து அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்புவார்கள். அவை புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களின் அடுத்த பாகம் என்ற கேள்வி தான். இதில் ஒரு கேள்விக்கு தற்போது விடை கிடைத்துவிட்டது.

இந்நிலையில் நேற்று தனியார் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட செல்வராகவன் புதுப்பேட்டை 2 குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் “ அடுத்த என்ன படம் பண்ணப் போறீங்கன்னு பலர் கேட்கிறார்கள். என்,ஜி.கேவை தொடர்ந்து நான் இயக்கப் போகும் படத்தில் தனுஷ் தான் ஹீரோ. என்ன பண்ணலாம், என்ன பண்ணலாம் என யோசிக்கும் போது, புதுப்பேட்டை 2 பண்ணிடலாம் என்று உறுதி செய்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை கேட்டவுடன் அவரது ரசிகர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது. இதேபோல் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் குறித்த அறிவிப்பையும் வெளியிட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

செல்வராகனின் இரண்டாம் உலகம், என்.ஜி.கே ஆகிய படங்களுக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்த நிலையில், புதுப்பேட்டை 2 படத்தின் மூலம் ரசிகர்களை திருப்திப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் செல்வராகவன் உள்ளார்.

1newsnationuser1

Next Post

“என் கருத்துகளை கேட்காமல் என்னை கொண்டாட வேண்டாம்..” மோடியின் பெண்கள் தின மரியாதையை நிராகரித்த 8 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர்..

Sat Mar 7 , 2020
என்னுடைய கருத்துகளை கேட்காமல் என்னை கொண்டாட வேண்டாம் என்று கூறி, பிரதமர் மோடியின் பெண்கள் தின மரியாதையை 8 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் நிராகரித்துள்ளார். பெண்கள் தினத்தை முன்னிட்டு சாதனை பெண்களை கவுரவிப்பதற்காக #SheInspireUs என்ற பிரச்சாரத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட மோடி “வாழ்க்கையில் மற்றும் பணியில் மற்றவர்களுக்கு முன்னுதரணமாக விளங்கும் பெண்கள், இந்த மகளிர் தினத்தன்று எனது சமூக வலைதள பக்கங்களை […]
licypriya and modi

You May Like