
கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் ரயில்பயணிகளிடம் சோதனை நடத்த மத்திய ரயில்வே பாதுகாப்பு படையினரால் புனே ரயில் நிலையத்தில் ரோபா ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
இந்தியா கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்துவரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் 5 ஆம் கட்ட ஊரடங்கில் பேருந்துகள், ரயில்கள்,விமானங்கள் இயங்கலாம் என்பது போன்ற சில தளர்வுகளை அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து பல்வேறு பணிகளுக்காக ரயில் பயணங்களை மக்கள் அதிகளவில் நாடத்தொடங்கிவிட்டனர்.
இதன் காரணமாக ரயிலில் வரும் பயணிகளின் உடல் வெப்பநிலை மற்றும் அவர்களை சோதிக்கும் வகையில் மத்திய ரயில்வே பாதுகாப்பு படையினர் ரோபோ ஒன்றினை செய்து அதற்கு கேப்டன் அர்ஜூன் என்று பெயரிட்டுள்ளனர். இந்த ரோபோவினை தற்போது புனே ரயில் நிலையத்தில் பயணிகளைக்கண்காணிக்கவும்,ஸ்கேன் செய்யும் வகையில் வைத்துள்ளனர்.மேலும் ரோபோ நீங்கள் எப்போதும் பொறுப்பாக இருங்கள் மற்றும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று பயணிகளிடம் தெரிவித்து வருகிறது.
மேலும் இந்த ரோபோவில் மோஷன் சென்சார்கள், ஒரு பான்-டில்ட்-ஜூம் கேமரா மற்றும் டோம் கேமரா ஆகியவை சந்தேகத்திற்கிடமான அல்லது சமூக விரோத நடவடிக்கைகளைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவை கொண்டுள்ளது. அதோடு கூடுதலாக வெப்ப நிலையை கணக்கிடும் திறனும் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது.

இதனை வைத்து வெறும் அரை விநாடிக்குள் டிஜிட்டல் டிஸ்ப்ளேயில் வெப்பநிலையை பதிவு செய்து கொடுக்கும் பட்சத்தில் வெப்பநிலை அளவுக்கு அதிகமாக இருந்தால் தானியங்கி அலாரத்தையும் ஒலிக்கிறது. தற்போது புனே ரயில் நிலையத்தில் உள்ள இந்த ரோபோ அனைத்து பயணிகளின் ஈர்ப்பை பெற்றுள்ளது.