யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க.. கர்ப்பமான 11-வது நாளில் குழந்தை பெற்ற பெண்.. மருத்துவர்களுக்கும் ஆச்சர்யம்.. ஆனால் நடந்ததே வேறு.. வங்கியுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை இப்படி மாற்றலாம் ! அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா.? இது என்ன தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!!! டிக் டாக் ஜி.பி.முத்துவின் "ஜி.பி.எஃப் அத்தியாயம்1" காரை வீடாக மாற்றிய தம்பதி.. அதுவும் வெறும் ரூ. 4,000 செலவில்..!! #Carlifecouple குடும்பத்தை காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் 21 வயது மாணவி – குவியும் பாராட்டு உச்சபச்ச அலட்சியம்.. மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் தெரு நாய்.. #Video நடராஜன் பந்துவீச்சில் ஆஸி கேப்டன் அவுட் ? குழந்தை போல் அடம்பிடித்த ரிஷப் பந்த் வெற்றி நடைபோடும் தமிழகமே வெறும் விளம்பரம் தானா? – மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி இந்த புலி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை எப்படி இழுக்குது பாருங்க.. வைரலாகும் மாஸ் வீடியோ.. மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் ! காயங்களுடன் உயிருக்கு பெண் போராட்டம் இந்த வருடத்தின் ஸ்டைலிஷ் கார் இது தான் ! சந்தையில் தூள் கிளப்பும் மெர்சிடஸ் பென்ஸ் சொதப்பல் வீரர்களை கழற்றி விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் – வீரர்கள் ஏலத்திற்கு முன் பரபரப்பு

புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் ஆலய ரத யாத்திரைக்கு தடை – உச்சநீதிமன்றம்

பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் ஆலய ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

mcms 2

ஒடிசா மாநிலத்தின், கடற்கரை நகரான பூரியில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெகந்நாதர் கோயில் புகழ்பெற்றது. இங்கு மூலவர்களாக பாலபத்ரா, அவரின் சகோதரர் ஜெகந்நாதர், சகோதரி தேவி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமுமம் உடன் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மூலவர்களுக்கு புதிய தேர் செய்யப்பட்டு, அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள்.

தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்படும் ஜெகந்நாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா ஆகியோர் 2 கி.மீ தொலைவில் உள்ள தங்களின் அத்தை கோயிலான மவுசிமா கோயிலுக்கு சென்று ஓய்வு எடுப்பாரக்ள். அங்கிருந்து 9-வது நாள் மீண்டும் புறப்பட்டு பூர்வீக இடத்துக்கு திரும்புவார்கள். மிக நீண்ட தெருக்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களையும் இழுக்கும் வைபவத்துக்கு படாதண்டா என்று அழைக்கப்படுகிறது. இந்த ரதயாத்திரைக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட மரத்தால் தேர் செய்யப்பட்டு, திருவிழா முடிந்தவுடன் அந்த தேர் கலைக்கப்படும். இந்த மூன்று தேர்களுக்கு தாலத்வாஜா, தேபேத்லன், நந்திகோஷா என்று பெயரிடப்பட்டிருக்கும் என்று குறிப்பிடுகிறார்கள்.

images 57 1

ஒவ்வொரு தேரும் ஏற்குறைய 14 அடி நீளம்வரை இருக்கும். தேர் தெருக்களில் நகர்ந்து வரும்போது, மக்கள் மேள தாளங்களை இசைத்தும், இசைக்கருவிகளை மீட்டியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவைக் காண உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கிலான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து திரும்புவார்கள். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக 23-ம் தேதி நடைபெறவிருந்த பூரி ஜெகநாதர் ரத யாத்திரையை தள்ளிவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாட்டே தலைமையிலான அமர்வு, அதிகளவில் மக்கள் கூடுவதை அனுமதிக்க முடியாது. தற்போது அனுமதி கொடுத்தால் ஜெகநாதரே மன்னிக்கமாட்டார் எனக்கூறி பூரி ஜெகநாதர் ஆலய ரத யாத்திரைக்கு தடை விதித்து உத்தரவிட்டார் ஊரடங்கு காரணமாக இதுபோன்று பல முக்கிய கோயில்களின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser4

Next Post

சீனா நடத்திய சைபர் தாக்குதல்: குறிவைக்கப்பட்ட 50 செயலிகள்

Thu Jun 18 , 2020
சீனாவின் அடுத்த இலக்கு சைபர் தாக்குதல் 50 சீன மொபைல் ஆப்களை தடை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சீனா அடுத்த கட்டமாக இந்தியாவை சேர்ந்த அரசு இணையதளங்கள், ஏடிஎம்முடன் தொடர்புடைய வங்கி அமைப்பு ஆகியவற்றை குறிவைத்து செவ்வாய், புதன்கிழமையன்று சீனாவிலிருந்து சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத் தலைநகர் செங்குடு பகுதியில் இருந்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் பெரும்பாலானவை தோல்வியில் முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்குடுவில் சீன […]
images 58

You May Like