கொட்டும்  மழையில் ராகுல்காந்தி ஜோடோ யாத்ரா …

மைசூருவில் காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல்காந்தி 2-வது நாளாக கொட்டும் மழையிலும் ’பாரத் ஜோடோ யாத்திரை ’யில் பங்கேற்றார்.

மைசூருவில் 2-வது நாளாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜோடோ யாத்திரை நடத்தினார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து ஜோடோ யாத்திரையை தொடங்கினார். கேரளாவில் 19 நாட்கள் யாத்திரை முடிந்தது. கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மற்றும் குண்டலுபேட்டையில் ராகுல்காந்திக்கு வரவேற்புஅளிக்கப்பட்டது.

இதைடுத்து நேற்று மைசூருவில் யாத்திரை தொடங்கியது. நஞ்சன்கூட்டின் தாண்டவபுரா கிராமத்தில் அவர் தங்கினார். காந்தி ஜெயந்தியை ஒட்டி பதனவாலு கிராமத்தில் காதி கிரமோத்யோக் மையத்திற்கு சென்றார். 1927 மற்றும் 1932 ஆகிய ஆண்டுகளில் மகாத்மா காந்தி வந்து சென்றார். அவரது நினைவாக அங்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அங்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் மைசூருவுக்கு வந்தார். அப்போது பொதுவிடத்தில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோதே மழை கொட்டியது. கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அவர் மக்கள் மத்தியில் பேசினார்.

ஜோடோ யாத்திரையில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியாகாந்தி மைசூரு வந்துள்ளார். சமீப காலங்களில் சோனியாகாந்த எந்த பிரசார பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று பேசியதில்லை. உடல்நிலை சரியில்லாததால் அவர் பங்கேற்காமல் இருந்தார். இந்நிலையில் நீண்ட நாட்கள் கழித்து கட்சி சார்பிலான பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

நடிகர் வடிவேலுவின் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’..!! ரிலீஸ் தேதி குறித்து வெளியான தகவல்..!!

Mon Oct 3 , 2022
நடிகர் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் தனக்கென நகைச்சுவை பாணி அமைத்து, இன்றளவும் மீம்ஸ் கிரியேட்டர்களால் அதிகம் பேசப்படுபவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. நகைச்சுவை மட்டுமின்றி குணசித்திர கதாபாத்திரத்திலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட நடிகர் வடிவேலு, சிம்புதேவனின் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தில் இரட்டை கதாபாத்திரங்களில் முதன்மையான ஹீரோவாக நடித்து அதிலும் வெற்றிக்கண்டார். வரலாற்று கதை போன்று […]
’இந்த காரணத்துக்காக தான் என்னை தப்பா பேசுறாங்க’..!! நடிகர் வடிவேலு ஓபன் டாக்..!!

You May Like