உடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி ? தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் ! ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல்? அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு..? தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா ? முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா..? மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி..! துரிதமாக செயல்பட்டு மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு..! "ஐயயோ.. என் புருஷன் வரப்போறாரு.." பயத்தில் கள்ளகாதலனுடன் கம்பி நீட்டிய மனைவி..! தவிக்கும் குழந்தைகள்..!

ஊரடங்கில் நச்சுன்னு வேலை பாத்த ரயில்வேத்துறை.. வெளியானது நீண்ட பட்டியல்

ரயில் பாதைகளை மின்மயமாக்குதல், இரட்டிப்பாக்குதல், பழைய பாலங்களை மறு சீரமைத்தல் போன்ற, நீண்டகாலமாக கிடப்பில் இருந்த 200 முக்கிய திட்டங்களை ஊரடங்கு காலத்தில் நிறைவேற்றியுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Tamil News large 2566274

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு 100 நாட்களை கடந்து இன்னமும் நீடித்து வருகிறது. இதன் காரணமாக பயணிகள் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு, சிறப்பு ரயில்கள் மட்டும் குறிப்பிட்ட மார்க்கங்களில் இயக்கப்படுகின்றன. வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் இது போன்ற அரிய வாய்ப்பினை பயன்படுத்தி ரயில்வே துறையானது நாடு முழுவதும் நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த பணிகளை முடித்துள்ளது.

இதன் மூலம் 82 பாலங்கள் புனரமைப்பு, 48 லெவல் கிராசிங்குகளை அகற்றிவிட்டு சுரங்கப்பாதை, 16 நடை மேம்பாலங்களை கட்டியது, பழைய நடை மேம்பாலங்களை அகற்றுவதற்கான 14 திட்டங்கள், சாலை மேம்பால திட்டங்கள் 7, யார்டு மறுவடிவமைப்பு திட்டங்கள் 5 மற்றும் 26 பிற திட்டங்களை முடித்துள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

gallerye 063034840 2566274

இதில் குறிப்பாக சென்னை டிவிஷனில் உள்ள ஜோலார்பேட்டையில் யார்டு மாற்றப்பட்டதால் ரயில் பாதையின் வேகம் 60 கி.மீ வரை மேம்பட்டுள்ளது. பெங்களூரு பயணத்தை இது எளிதாக்கும்.

அதே போல் லூதியானா ரயில் நிலையத்தில் கைவிடப்பட்டு ஆபத்தான நிலையில் விளங்கிய 135 மீட்டர் நீளம் கொண்ட நடை மேம்பாலத்தை அகற்றியுள்ளனர். இதனை சவாலான பணியாக ரயில்வே கருதியது. இம்முயற்சி 2014 முதல் தாமதமாகி வந்தது. காரணம் இது 19 ரயில் பாதைகள், 7 பயணிகள் ரயில் மேடைகளின் ஊடாக சென்றது. இது போன்ற பல திட்டங்களை ஊரடங்கு வாய்ப்பை பயன்படுத்தி வெற்றிகரமாக முடித்துள்ளனர்

1newsnationuser4

Next Post

தூய தமிழில் பேசினால் ரூ.5 ஆயிரம் பரிசு - தமிழக அரசு புதிய திட்டம்

Sun Jun 28 , 2020
தூய தமிழில் பேசுவோருக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைமுறை வாழ்க்கையில் கலப்பு சொற்கள் தவிர்த்து, தூய தமிழில் பேசுவோரில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 3 பேருக்கு ரூபாய் 5 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், தகுதியோடையோர் சொற்குவை.காம் என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் […]
Hospital registration of non-medical treatment canceled ...

You May Like