பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..!

அரசியல் மாற்றம் குறித்து பாமர மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும் நன்றி.. ரஜினி ட்வீட்..

அரசியல் மாற்றம் குறித்து தான் தெரிவித்த கருத்துகளை பாமர மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும் நடிகர் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார்.

rajini speech

சென்னையில் நேற்று முன் தினம், நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார். முதலமைச்சர் பதவியெல்லாம், தன்னால் நினைத்து கூட பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார். முதல்வராக வேண்டும் 1996-ம் ஆண்டிலேயே தனக்கு வாய்ப்பு வந்தபோது முதல்வர் ஆகியிருக்கலாம் என்றும் விளக்கம் அளித்தார்.

அதுமட்டுமின்றி, தமிழகம் முழுவதும் அரசியல் எழுச்சி ஏற்பட்டால், அதன்பிறகு அரசியலுக்கு வருவதாகவும் திட்டவட்டமாக தெரிவித்தார். அந்த எழுச்சி இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என்றும், மூலை முடுக்கெல்லாம் அதனை கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் ரஜினி வேண்டுகோள் விடுத்தார்.

rajini n

இம்முறையும் ரஜினி அரசியலுக்கு வருகிறாரா அல்லது இல்லையா என்பதை தெளிவாக கூறாததால், அவரது ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். மேலும் மக்கள் எழுச்சி பரவிய பிறகு நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்று அவர் கூறியுள்ளதும், அவர் இப்போதைக்கு அரசியலுக்கு வர போவதில்லை என்பதை உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது என ஒரு சிலர் கூறிவருகின்றனர். மேலும் அவரின் பேச்சை கிண்டல் செய்யும் விதமாக பல மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் வலம் வந்தன.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அவரின் ட்விட்டர் பதிவில் “ அரசியல் மாற்றம்… ஆட்சி மாற்றம், இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

சட்டவிரோதமாக ஊடுருவியர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று போராடுவது அருவருக்கத்தக்க செயல்.. ஹெச். ராஜா கருத்து..

Sat Mar 14 , 2020
சட்டவிரோதமா ஊடுருவி வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்தப்படுவது அவமானம், அசிங்கம், அருவருக்கத்தக்க செயல் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு ஒருபுறம் போராட்டம் வரும் நிலையில், அந்த சட்டத்திற்கு விளக்கம் அளிக்கும் ஆதரவு பொதுக்கூட்டங்களை பாஜக தலைவர்கள் நடத்தி வருகின்றனர். அந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தமிழகத்திலும் சிஏஏ ஆதரவு பொதுக்கூட்டங்களில் கலந்துக்கொண்டு அந்த சட்டம் குறித்து விளக்கி வருகின்றனர். […]
"விபச்சாரிகளின் வீட்டிற்கு சென்று கும்மாளம் அடிக்கும் ஈவேரா"...! ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு

You May Like