வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

“யாருக்கு ஓட்டு போடனும்னு மக்களுக்கு தெரியல.. அந்தளவுக்கு அறிவில்லாம இருக்காங்க..” ரஜினி பேச்சின் முழு விவரம்..

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் குறித்த பல்வேறு கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.

rajini 1

சென்னை லீலா பேலஸ் நட்சத்திர ஹொட்டலில் இன்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ சில தினங்களுக்கு முன்பு மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், எனக்கு திருப்தியில்லை என்று நான் சொன்னேன். அதுகுறித்து பல்வேறு விஷயங்கள் வதந்திககளாக ஊடகங்களில் வெளியாகின.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த சந்திப்பு. வருங்கால அரசியல் எப்படி இருக்கும், என்பது குறித்து கண்ணோட்டம். 1996-ல் இருந்து 25 ஆண்டுகளாக ரஜினி அரசியலுக்கு வரவில்லை, வரவில்லை என்று கூறிவருகிறார்கள், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொன்னது 2017-ல் தான். இனிமேல் யாரும் 25 ஆண்டுகள் என்று கூறமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்த வரை, சி.எம் பதவி எல்லாம் என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது. 1996-லேயே எனக்கு வாய்ப்பு வந்தது, ஆனால் முதல்வராக நான் விரும்பவில்லை. நான் கட்சி தலைவராக இருந்து, நல்ல இளைஞரை, படித்த, தொலைநோக்கு சிந்தனை, தன்மானம் உள்ளவரை ஆட்சியில் உட்கார வைப்போம்.

அழகு பார்க்கிறது என்பது அரசியலில் பிடிக்காத வார்த்தை. நான் முதல்வர் வேட்பாளர் இல்லை என்று மாவட்ட செயலாளர் கூட்டத்தில் சொன்னேன். எனக்கு முதலமைச்சர் பதவி வேண்டாம் என்பது நான் இன்று கூறியது இல்லை.. 2017-ல் நான் அதை கூறினேன். எனக்கு அரசியல் மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.

rajini n

சிஸ்டம் சரிசெய்யாம, அரசியல் மாற்றம் கொண்டுவராம ஆட்சி மாற்றம் நடந்தால், மீன் குழம்பு வைத்த பாத்திரத்தில், சக்கரை பொங்கல் வைத்த மாதிரி தான் இருக்கும். எனவே முதலில் சிஸ்டத்தை சரி செய்து, அரசியல் மாற்றம் கொண்டு வரவேண்டும். அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்களை வைத்துள்ளேன்.

முதலாக, திமுக, அதிமுக போன்ற மிகப்பெரிய கட்சிகளில் 50,0000-க்கும் மேற்பட்ட கட்சிப் பதவிகள் இருக்கின்றன. தேர்தல் நேரத்தில் மட்டும் அந்த பதவிகள் போதும். எனது கட்சியில் 60 – 65 சதவீத பேர் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு நான் சீட் கொடுப்பேன். இளைஞர்களுக்கு எம்.எல்.ஏ சீட் வழங்கும் திட்டத்தை கொண்டுள்ளேன்.

தேசிய அளவிலான கட்சிகளில் கூட, கட்சிக்கும், ஆட்சிக்கும் ஒரே தலைவர் இருக்கின்றனர். எனவே 5 ஆண்டுகளில் மக்கள் எதுவும் கேட்க முடியாது. ஆக, கட்சிக்கு ஒரு தலைவர், ஆட்சிக்கு வேறு ஒரு தலைவர், இருக்க வேண்டும். நாம் எதிர்க்கிறது இரண்டு பெரிய ஜாம்பவான்கள்,, அசுர பலத்துடன் இருக்க கூடிய இரண்டு கட்சிகளை எதிர்கொள்ள வேண்டும்.

திமுகவை பொறுத்தவரை, 70 சதவீதம் பேர் கருணாநிதிக்காக தான், 30 சதவீதம் தான் கட்சிக்கு வாக்களித்தார்கள். அதேபோல, அதிமுகவை பொறுத்தவரை, கட்சிக்கு 30 சதவீதம், ஜெயலலிதாவிற்காக தான் 70 சதவீதம் பேர் வாக்களித்தனர். திமுக – அதிமுக என்ற இருபெரும் கட்சிகளுக்கு இடையே சினிமா ரசிகர்களை மட்டும் வைத்து கொண்டு, நாம் தேர்தலில் ஜெயிக்க முடியுமா..? 2 பெரிய ஆளுமைகள் இல்லை.. இதுதான் வெற்றிடம்..

rajinikanth n 2

ஜெயலலிதா இல்லை.. கருணாநிதி இல்லை.. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் இளைஞர்கள் மத்தியில், எழுச்சியை உருவாக்க வேண்டும், அந்த எழுச்சி, அலையை உருவாக்கினால் அசுர பலம், பண பலம், அதிகாரம்.. எல்லாம் தூள் தூளாகிவிடும்.. யாருக்கு ஓட்டு போடனும்னு மக்களுக்கு தெரியல, அந்தளவுக்கு அறிவில்லாம இருக்காங்க.. எனவே தமிழகம் முழுவதும் அரசியல் எழுச்சி ஏற்பட வேண்டும்.

தமிழ்நாட்டிற்காக, தமிழ் மக்களுக்காக அரசியல் புரட்சி வெடிக்கனும். வருங்கால முதலமைச்சர்.. வருங்கால சி.எம் அதையெல்லாம் நிறுத்துங்கள்.. அரசியல் எழுச்சி முதலில் எனக்கு தெரியட்டும்.. அப்போ வரேன் அரசியலுக்கு.. கட்சி பதவிகள் எல்லாம் நீக்கனும், இளைஞர்கள் வரனும், கட்சி வேறு, ஆட்சி வேறு என்பது இந்தியா முழுவதும் பரவ வேண்டும். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்போது இல்லை என்றால், எப்போதுமே இருக்காது..” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

செய்தியாளர்கள் சந்திப்பு என்று கூறிவிட்டு, பத்திரிகையாளர்களின் கேள்விகளை ரஜினி தவிர்த்ததால் ஏமாற்றம்..

Thu Mar 12 , 2020
செய்தியாளர்கள் சந்திப்பு என்று கூறிவிட்டு, ரஜினி பத்திரிகையாளர்களின் கேள்விகளை தவிர்த்துள்ளது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார். மேலும் தான் 25 ஆண்டுகளாக அரசியலுக்கு வருகிறேன், எனப் பலர் கூறிவருகின்றனர் என்று தெரிவித்த ரஜினி, 2017-ம் ஆண்டில் தான் அரசியலுக்கு வருவதை […]
rajini n

You May Like