பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..?

ரஜினியின் அடுத்த படம் சந்திரமுகி 2 : இந்த தகவலை உறுதி செய்த பிரபலம் யார் தெரியுமா..?

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்திற்கு பிறகு, மீண்டும் பி.வாசுவுடன் ரஜினி கைக்கோர்க்க உள்ளது உறுதியாகி உள்ளது.

chandramukhi 2

தர்பார் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி நடிக்க உள்ள படத்தை யார் இயக்கப்போவது என்பது குறித்த பல தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. நடிகரும், இயக்குனரும், ரஜினியின் தீவிர ரசிகருமான ராகவா லாரன்ஸ் தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ரஜினியின் அடுத்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் இயக்கவில்லை என்பதும், அவர் அந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. நடிகர் ராகவா லாரனஸ் ‘சந்திரமுகி 2’ படத்தில் ரஜினியுடன் இணைந்துள்ளதை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ ரசிகர்களுக்கு, நண்பர்களுக்கு ஒரு நல்ல செய்தியை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். நான் நடிக்க உள்ள படங்களில், தலைவரின் ‘சந்திரமுகி 2’படமும் ஒன்று. தலைவரின் ஆசியுடனும், அனுமதியுடனும் பி.வாசு இயக்கும் இப்படத்தில் நடிப்பதால் நான் அதிர்ஷ்ட்சாலி என்று கருதுகிறேன். சன்பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தின் மூலம் எனக்கு கிடைத்த அட்வான்ஸ் தொகையை கொரோனா நிவாரண நிதிக்கு எனது பங்களிப்பாக பணிவுடன் அளிக்க உள்ளேன்.

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம், தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், ஃபெப்ஸி யூனியனுக்கு ரூ.50 லட்சம், நடனக்கலைஞர்களின் யூனியனுக்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 25 லட்சம், நான் பிறந்த ராயபுரத்தில் வசிக்கும் ஏழை, கூலித் தொழிலாளர்களுக்கு ரூ.75 லட்சம் வழங்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2005-ம் ஆண்டு வெளியான சந்திரமுகி படம், ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பாபா படம் அடைந்த மிகப்பெரிய தோல்வியடைந்த பிறகு, ரஜினியின் சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது. ஆனால் சந்திரமுகி படம், ரஜினிக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. எனவே சந்திரமுகி 2 குறித்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

1newsnationuser1

Next Post

லாக்டவுனை மேலும் 2 வாரங்களுக்கு நீடித்தால் தமிழகத்தில் நோய் பரவல் குறையும் - மருத்துவக்குழு

Fri Apr 10 , 2020
சென்னை தமிழகத்தில் ஊரடங்கினை மேலும் 2 வாரகாலங்களுக்கு நீடிக்க வேண்டும் என மருத்துவக்குழுவினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தியுள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்கவும், சிகிச்சை முறை குறித்து ஆலோசனை வழங்கவும் 14 மருத்துவர்கள் அடங்கிய குழுவினை நியமித்தார். தற்போது இந்திய அளவில் 834 பேர் பாதிக்கப்பட்டு தமிழகம் 2 வது இடத்தில் உள்ள நிலையில் எவ்வாறு இதனை கட்டுப்படுத்த முடியும், அடுத்தகட்ட […]
சென்னையில் முழு ஊரடங்கினை தீவிரப்படுத்தவேண்டும்- தலைமைச்செயலர் சண்முகம் உத்தரவு

You May Like