இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

“அரசியலில் நான் போட்ட புதுப்புள்ளி சுழலாக மாறியுள்ளது.. அது சுனாமியாக மாறி, அதிசயம், அற்புதம் நடக்கும்..” ரஜினிகாந்த் பேச்சு..

அரசியலில் தான் போட்ட புதுப்புள்ளி தற்போது சுழலாக மாறியுள்ளதாகவும், அது விரைவில் சுனாமியாக மாறி அதிசயம், அற்புதம் நடக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

rajini n

சென்னையில் நடைபெற்ற பிரபல நெறியாளர் ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா யூ டியூப் சேனலின் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “பாண்டே போன்று கேள்வி கேட்பவர்களை இதுவரை நான் பார்த்ததே கிடையாது. என்னிடம் கூட அவரின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று சொன்னார்கள்.

ஆனால் அவரிடம் நான் மாட்ட மாட்டேன் என்று கூறிவிட்டேன். பாண்டே தந்தி டிவியில் இருந்து வெளியேற போகிறார் என்று கேள்விப்பட்டவுடன் ஆச்சர்யமாக இருந்தது. வேறு ஏதாவது சேனலுக்கு செல்வார் என்று பார்த்தால், சாண்க்யா என்ற யூடியூப் சேனல் ஆரம்பித்தது வியப்பளித்தது. சாணக்யா என்ற பெயரிட்ட உடனே, அவரின் சாணக்யத்தனம் தெரிந்துவிட்டது.

எல்லாருடையே பேச்சை கேட்பவர்களும், உருப்படமாட்டார்கள், யாருடைய பேச்சையும் கேட்காதவர்களும் உருப்படமாட்டார்கள். எம்.ஜி.ஆர் 25 ஆண்டுகள் திமுகவில் இருந்தவர். கலைஞர் முதலமைச்சராவதற்கு எம்.ஜி.ஆரும் காரணம். திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டவுடன் ஏற்பட்ட அனுதாப அலை காரணமாக தேர்தலில் ஜெயித்தார். திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் தூக்கி வீசப்பட்டதால் ஏற்பட்ட அலை காரணமாக அவர் முதலமைச்சர் ஆனார்.

rajini 1

1991-ல் ராஜீவ் காந்தி படுகொலையால் ஏற்பட்ட அனுதாப அலை காரணமாக ஜெயலலிதா ஜெயித்தார். ஆக, அரசியலில் அலை என்பது ரொம்ப முக்கியமானது. நானும் கொஞ்ச நாளைக்கு முன்னாடி அரசியலில் புதுப்புள்ளி போட்டேன். அந்தப் புள்ளி தற்போது சுழலாகி உருவாகி உள்ளது. அதனை அலையாக மாற்ற ரஜினிகாந்த் போகனும், ரஜினி ரசிகர்கள் போகனும். தேர்தல் நெருங்க, நெருங்க, அந்த அலை சுனாமியாக மாறும். அது ஆண்டவன் கையில் உள்ளது. அது உருவாகும், நிச்சயம் அதிசயம் அற்புதம் நடக்கும்” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

‘கொரோனாவுக்கு யோசனை; ரூ.1 லட்சம் பரிசு..!’ - பிரதமர் மோடி அறிவிப்பு

Mon Mar 16 , 2020
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க யோசனை கூறுபவர்களுக்கு 1 லட்சம் பரிசளிக்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உயிர்ப்பலி வாங்கி வருகிறது. தற்போது, இந்தியாவிலும் இந்த வைரஸ் அதிவிரைவாக பரவி வருகிறது. இதைக்கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முழு முயற்சி எடுத்து வருகின்றன. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸால் 114 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார […]

You May Like