UPI கட்டண முறையில் வர உள்ள மிகப்பெரிய மாற்றம்.. கூகுள் பே, அமேசான் பே பயனர்கள் பாதிக்கப்படலாம்.. 90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

கொரோனா குறித்து தவறான தகவலை தெரிவித்தாரா..? ரஜினியின் வீடியோவை நீக்கிய ட்விட்டர்..

கொரோனா வைரஸ் குறித்து ரஜினி வெளியிட்ட வீடியோவை, ட்விட்டர் நீக்கியுள்ளது.

rajinikanth

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கொரோனா பரவுதலை தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாளைய தினம் பொது ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று மோடி அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் குறித்து, நேற்று முன் தினம் நாட்டு மக்களிடம் உரையாற்றி மோடி, நாளைய தினம் பொது ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அன்றைய தினம் காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தினார். மோடியின் இந்த அறிவுரை பல்வேறு பிரபலங்களும் தங்கள் கருத்தை பதிவிட்டு வந்தனர்.

modi speech about corona

அந்த வகையில் இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் “ கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. அது 3-வது நிலைக்கு போய்விடக் கூடாது. மக்கள் நடமாடும் பகுதிகளில் இருக்கும் கொரோனா வைரஸ், 12 முதல் 14 மணி நேரம் அது பரவாமல் இருந்தாலே 3-வது நிலைக்கு போகாமல் தடுத்து நிறுத்திவிடலாம். அதற்காக பிரதமர் மோடி வரும் 22-ம் தேதி, நாளை ஜனதா ஊரடங்கு என்ற பெயரில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதேபோல் இத்தாலியில் கொரோனா வைரஸ் 2-வது நிலையில் இருக்கும் போது அந்நாட்டு அரசும் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அதனை மக்கள் உதாசீனப்படுத்தியதால், பல ஆயிரம் உயிர்கள் பலியானது. அது போன்ற நிலை இந்தியாவிற்கு வரக்கூடாது. ஆக அனைத்து தரப்பு மக்களும் இந்த ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் வீடியோ பதிவை டிவிட்டர் நீக்கியுள்ளது. தங்களது விதிமுறைகளை மீறியதால் அதனை நீக்கியதாகவும் ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மக்கள் நடமாடும் பகுதிகளில் இருக்கும் கொரோனா வைரஸ், 12 முதல் 14 மணி நேரம் அது பரவாமல் இருந்தாலே 3-வது நிலைக்கு போகாமல் தடுத்து நிறுத்திவிடலாம் என்று ரஜினி கூறிய கருத்து தான் அதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

rajini tweet

ஏனெனில் கொரோனா வைரஸ் 3 நாட்கள் வரை இருக்கக்கூடும் என்றும், கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து 1 – 2 வாரங்கள் வரை மற்றொருவருக்கு அந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா குறித்த வதந்திகள் பரவுவதை தடுக்க, சமூக வலைதளங்கள் தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில், தவறான கருத்தை ரஜினி கூறியதால் இந்த வீடியோ நீக்கப்பட்டதுள்ளது என்று கூறப்படுகிறது.

1newsnationuser1

Next Post

தன் கையே தனக்கு உதவி...கொரோனா வைரஸால் பாரம்பரிய முறைக்கு மாறிய அரசு பேருந்து...

Sun Mar 22 , 2020
கொரோனா அச்சம் காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், தன் கையே தனக்கு உதவி என்று அரசு பேருந்தில் வேப்பிலை மற்றும் துளசிகள் கட்டப்பட்டு இயக்கப்பட்டது மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தமிழக அரசு மேற்க்கொண்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினிகளும் தெளிக்கப்பட்டு வருகிறது. அதே போல் தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என […]
Help her out ... The government bus that became the traditional system by the corona virus ...

You May Like