அயோத்தி ராமர் கோயில் எப்பொழுது திறக்கப்படும்…? பொதுச் செயலாளர் தகவல்…!

அயோத்தி ராமர் கோயில் கருவறையில் ராம் லல்லா சிலை நிறுவப்பட்ட பிறகு, ஜனவரி 2024 இல் மகர சங்கராந்தியின் போது அயோத்தியில் உள்ள ராமர் கோயில் திறக்கப்படும். 1,000 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் அளவுக்கு பூகம்பத்தை எதிர்க்கும் வகையில் உறுதியானதாக கோவில் இருக்கும். இந்தத் தகவலை ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் பகிர்ந்துள்ளார்.

1,800 கோடி செலவில் கட்டப்படும் இக்கோயில், 50 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் சம்பத் ராய் தெரிவித்தார். மொத்தம் 392 தூண்கள் மற்றும் 12 கதவுகள் கொண்ட இந்த கோவில் இரும்பு கம்பிகள் பயன்படுத்தப்படாமல் கட்டப்பட்டு வருகிறது. கற்களை இணைக்க இரும்புக்கு பதிலாக செப்பு சில்லுகள் பயன்படுத்தப்படுகின்றன.

2.7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயிலின் கட்டுமானப் பணிகளுக்கு ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. திட்ட மேலாளர் ஜகதீஷ் அபாலே கூறுகையில், ராம நவமி அன்று ராம் லல்லா சிலை மீது சூரியக் கதிர்கள் விழும் வகையில் கருவறை கட்டப்பட்டுள்ளது என்றார்.

Vignesh

Next Post

எங்க ’பிரேக் அப்’க்கு காரணம் விஷ்ணுதான்..!! ஆனா, இப்போ அவரு இல்ல..!! ஆயிஷாவின் முன்னாள் காதலர் பகீர்..!!

Wed Oct 26 , 2022
பிக்பாஸ் ஆயிஷா தற்போது யோகேஷ் என்பவரை காதலித்து வருவதாக, அவரது முன்னாள் காதலன் தேவ் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த அசீம் – ஆயிஷா சண்டையும் அதற்குப் பிறகு ஆயிஷாவைக் கமல் பாராட்டியதும்தான் கடந்த சில நாட்களாக சின்னத்திரை ரசிகர்களின் ஹாட் டாபிக். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குத் தேர்வானபோதே ’நிச்சயம் கன்டென்ட் தருவார்’ எனப் பலரும் நம்பிய ஒருவர் ஆயிஷா. ஏனென்றால், சீரியல் ஏரியாவில் நுழைந்த நாட்களிலேயே பல சர்ச்சைகளில் சிக்கி […]
எங்க ’பிரேக் அப்’க்கு காரணம் விஷ்ணுதான்..!! ஆனா, இப்போ அவரு இல்ல..!! ஆயிஷாவின் முன்னாள் காதலர் பகீர்..!!

You May Like