பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..!

ரஷ்யாவின் நிரந்தர அதிபர் புதினா..?

ரஷியாவில் அடுத்து நடைபெற உள்ள 2 அதிபர் தேர்தல்களிலும் தான் போட்டியிவதற்கு ஏற்றவாறு சட்டத்திருத்தம் ஒன்றை அதிபர் புதின் அமல்படுத்தியுள்ளார்.

GettyImages Putin russia constitution 900120580 1


ஒருங்கிணைந்த சோவித் யூனியனின் உளவு அமைப்பில் தனது வாழ்க்கையை தொடங்கிய விளாடிமிர் புதின், கடந்த 1999-ம் ஆண்டு ரஷியா பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது அப்போதைய அதிபர் எல்ட்சினால் பொறுப்பு பிரதமராக முதல் முறையாக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அவர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள், பொதுமக்களிடையே அவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பல்வேறு அழுத்தங்கள் காரணமாக எல்ட்சின் தனது பொறுப்பை ராஜினாமா செய்ய, 1999-ம் ஆண்டு டிசம்பர் முதல் விளாடிமிர் புதின் ரஷியாவின் பொறுப்பு அதிபராக நியமனம் செய்யப்பட்டார். அதுமுதல் ரஷியாவின் அதிபர் அல்லது பிரதமர் ஆகிய இரண்டு பதவிகளில் ஏதேனும் ஒன்றில் தன்னை நிலைநிறுத்திவந்த புதின் , கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்றார். இதன் காரணமாக 2024-ம் ஆண்டு வரை அவர் அதிபர் பதவியில் நீடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்த வெற்றியின் மூலம் தொடச்சியாக 2-வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனிடையே, ரஷியாவில் உள்ள சட்டத்தின்படி ஒரு நபர் தொடர்ந்து 2 முறைக்கு மேல் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால், 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் புதின் போட்டியிட முடியாத சூழல் காணப்பட்டது. இந்நிலையில், ஆளும் ஐக்கிய ரஷியா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வலண்டினா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டத்தை புதுப்பிக்க வேண்டும் என்ற மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த புதிய சட்டத்தின்படி பழைய நடைமுறைகள் அழிக்கப்பட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான சட்டம் மீண்டும் முதலில் இருந்தே அமலுக்குவருகிறது.


அதாவது, ஏற்கனவெ தொடர்ந்து 2 முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர்கள் சட்டம் புதிக்கப்பட்டதால் மீண்டும் முதலில் இருந்தே அதிபர் தேர்தலில் போட்டியிடலாம். இதன் மூலம் தற்போது அதிபராக உள்ள புதின் அடுத்துவரும் இரண்டு தேர்தல்களிலும் எந்தவித தடையும் இன்றி போட்டியிடுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் வலண்டினா தாக்கல் செய்த குறிப்பிட்ட மசோதா பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது. இந்த மசோதா அதிபர் புதினின் ஒப்புதலுடன் சட்டமாகவும் இயற்றப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை முதலில் இருந்து தொடங்கியுள்ள புத்தின், 2024 மற்றும் 2030 ஆகிய இரண்டு தேர்தல்களில் போட்டியிடுவதற்கான சிக்கல்களை தகர்த்துள்ளார். அடுத்த இரண்டு தேர்தல்களிலும் அவர் வெற்றி பெறும் பட்சத்தில், 2036-ம் ஆண்டுவரை அதாவது புதின் தனது 83 வயது வரை ரஷியாவின் அதிபராக செயல்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

1newsnationuser4

Next Post

கொரோனா அச்சுறுத்தல்.. வாரணாசியில் உள்ள கோயிலில், கடவுள் சிலைகளுக்கு மாஸ்க் அணிவித்த பூசாரி..

Wed Mar 11 , 2020
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாரணாசியில் உள்ள கோயிலில் உள்ள கடவுள் சிலைகளுக்கு பூசாரி ஒருவர் மாஸ்க் அணிவித்துள்ளார். சீனாவில் உஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று, தற்போது உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதன்காரணமாக உலகளவில் சுமார் 4,000 பேர் உயிரிழந்துள்ளனர், சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவை தவிர இத்தாலி, ஈரான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே […]
covid 19 varanasi temple

You May Like