கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…! டெல்லியில் 26 ஆண்டுகள் இல்லாத குளிர்..! முக்கிய காரணங்கள் இவை தான்…! நவ.1 முதல் இந்த 5 விதிகளில் மாற்றம்.. சாமானிய மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கையை வெளியிட தடை – உச்ச நீதிமன்றம் அதிரடி

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Radha 1

தமிழகத்தில் 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இன்பதுரை 69 ஆயிரத்து 590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, அதிமுக வேட்பாளர் இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர் அப்பாவு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, தனக்கு சாதகமாக கிடைத்த 200 தபால் வாக்குக்களை செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்ததாகவும், அதுவே தான் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைய காரணம் என்றும் அப்பாதுரை தரப்பு குற்றம்சாட்டியது. மேலும் தபால் வாக்குகளின் போது எண்ணாமல் நிறுத்தப்பட்ட 203 வாக்குகளை எண்ண தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், திமுக வேட்பாளர் அப்பாதுரை கோரிக்கையை ஏற்று, தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டார். மேலும் 19, 20, 21 வது சுற்றில் எண்ணப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை அக்டோபர் 4ம் தேதி நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பதுரை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மேலும் உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால் இன்பதுரையின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது.

இதனிடையே, நீதிமன்ற உத்தரவின் படி இன்று காலை 11.30 மணிக்கு மறுவாக்குப்பதிவிற்கான பணிகள் நடைபெற்றன. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் நூலக கட்டத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதற்கான பணியில் ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய் சரவணன் தலைமையில் 26 பேர் ஈடுபட்டனர்.

இந்நிலையில் எம்.எல்.ஏ. இன்பதுரை தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிகை முடிவை, வரும் 23ம் தேதி வரை அறிவிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அந்த தேதியில் மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற உள்ள நிலையில், ராதாபுரம் தொகுதிக்கு யார் எம்.எல்.ஏ.வாக இருக்க போகிறார்கள் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

1newsnationuser2

Next Post

கோலிவுட்டில் 2019-ல் இதுவரை வந்த படங்களில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள்…

Fri Oct 4 , 2019
இப்போதெல்லாம் ரசிகர்கள் சற்று மாறியுள்ளனர். பெரிய ஹீரோ படங்களோ புதுமுக ஹீரோ படங்களோ கதை நன்றாக இருந்தால் ஹிட் ஆக்கி விடுகிறார்கள். இந்த வருடம் கிட்டதட்ட 200 தமிழ் படங்கள் வெளியாகியுள்ள போதும், வசூலில் சில படங்கள் மட்டுமே சிக்சர் அடித்தது . அந்த வகையில் இந்த வருடம் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் லிஸ்ட் என்ன என்பதை தற்போது பார்ப்போம். ஆண்டின் தொடக்கத்தில் வெளியான […]
top 5 1

You May Like