பிரபல ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கரனை அதிரடியாக கைது செய்த காவல்துறை….! காரணம் என்ன….!

பொதுவாக படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று எல்லோருக்குமே ஒரு ஆசை இருக்கும். நிச்சயமாக நாம் என்றாவது ஒரு நாள் பெரிய தொழிலதிபராக வேண்டும் என்ற ஆசை தான் அது.ஆனால் அப்படி தொழில் அதிபராவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒருவர் திடீரென்று தொழிலதிபராக மாறி ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை கட்டமைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது யாரோ ஒரு சிலருக்கு மட்டும் தான் அது போன்ற வாய்ப்பு கிடைக்கும் அப்படி உழைத்து முன்னேறி தொழிலதிபர் ஆனவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

அப்படி பிரபலமான ஒரு நபர் தான் ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவ சங்கரன் சென்னையின் பிரபல நிறுவனங்களில் ஒன்றான ரத்னா ஸ்டோர்ஸ் திருநெல்வேலியில் இருந்து பாத்திர தொழிலை தன்னுடைய மூலதனமாக வைத்து வந்த ஒரு குடும்பத்தினர் நடத்தி வந்த கடை தான் அந்த ரத்னா ஸ்டோர்ஸ்.

நம்பிக்கை, நாணயம், வைராசி என்ற விதத்தில் வீட்டு பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் விற்பனையில் வாடிக்கையாளர்களிடையே அதிலும் குறிப்பாக பெண்கள் இடையே பிரபலமான கடையாக அந்த கடை இருந்து வந்தது சற்றேற குறைய 72 வருட பாரம்பரியம் மிக்கது அந்த கடை சென்னை பாண்டி பஜார், தாம்பரம் உஸ்மான் சாலை, புரசைவாக்கம், வடபழனி, கேகே நகர் மற்றும் திருச்சி போன்ற பல்வேறு இடங்களில் இந்த கடைக்கு கிளைகள் இருக்கிறது.

முன்பே சொன்னதைப் போல ஒரு மனிதன் எந்த அளவிற்கு தன்னுடைய வாழ்க்கையில் வளர்ச்சியை சந்திக்கிறானோ, அதே அளவிற்கு அந்த மனிதனுக்கான எதிர்ப்பும் இருக்கத்தான் செய்யும். அந்த எதிர்ப்பை சந்தித்து அதனை மீறி வளர்ந்து வருவது தான் திறமை என்று சொல்வார்கள். நாம் எந்த அளவிற்கு வளர்ச்சி அடைகிறோமோ அந்த அளவிற்கு நமக்கு வரும் பிரச்சனையும் பெரிதாக காணப்படும்.

அதே விதத்தில் தான் ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கரன் அவர்களுக்கு ஒரு சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது. தூத்துக்குடியில் இயங்கி வரும் ராஜம் பைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஒட்டுமொத்தமாக 60 லட்சம் ரூபாய் சிவசங்கரன் கடன் பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பைனான்ஸ் நிறுவனத்தினரை சிவசங்கரன் அசிங்கமான வார்த்தையில் திட்டி கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இது குறித்து ராஜம் பைனான்ஸ் சார்பாக பிரபாகரன் என்பவர் தூத்துக்குடி காவல் நிலையத்தில் புகார் வழங்கியுள்ளார்.

இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு சென்னையில் இருந்த ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கரிடம் தூத்துக்குடி காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதோடு அவருடைய மனைவி வாசுகியும் கைது செய்யப்பட்டார். இருவரிடமும் விசாரணை நடத்தியதில் குற்றம் சிவசங்கரனால் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆகவே அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பேரூரணி சிறையில் அடைத்திருக்கிறார்கள் காவல்துறையினர்.

Next Post

“ இந்த விஷயத்துல பிரதமர் மோடி சொன்னா, புடின் கேட்பாரு..” அமெரிக்கா கருத்து..

Sat Feb 11 , 2023
உக்ரைனில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடினை சமாதானப்படுத்த முடியும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே கிட்டத்தட்ட ஓராண்டாக போர் நீடித்து வருகிறது.. இதுவரை இருநாடுகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் போரை நிறுத்துவதற்கான எந்த சுமூக உடன்பாடும் எட்டப்படவில்லை.. இதன் காரணமாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட மிக மோசமான அகதிகள் நெருக்கடியாக உக்ரைன் மீதான போர் […]

You May Like