குட் நியூஸ்..!! விரைவில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வருகிறது புதிய கருவி..!! இது என்ன செய்யும் தெரியுமா..?

ரேஷன் அட்டைதாரர்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், மலிவு விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த அத்தியாவசியப் பொருட்கள், கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மையை கொடுத்து வருகிறது. எனவே, ரேஷன் கடைகளில் நடைபெறும் குளறுபடிகளை தவிர்க்கும் பொருட்டு, ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும், ரேஷன் கடைக்கே நேரில் வந்து கைரேகை வைத்தால் மட்டுமே, பொருட்கள் வழங்கப்படும் என்றும், கைரேகை பதிவு கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இது சில நடைமுறை சிக்கல்களையும் ஏற்படுத்தி வருகிறது. காரணம், வெளியூர்களில் வசித்து வருபவர்கள், தினக்கூலி வேலைகளுக்கு செல்பவர்களால், ரேஷன் கடை நேரத்திற்கு சரியாக செல்ல முடிவதில்லை. அப்படியே சென்றாலும், காத்திருந்து கைரேகை பதிவு செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். அதனால்தான், கைரேகை பதிவுக்காக ரேஷன் கடைகளுக்கு வரும்படி யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என்றும், குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கு சென்று கைரேகை பதிவு செய்யும் பணியை ஊழியர்கள் முடிக்க வேண்டும் என்றும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதேசமயம், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்களை சரியாக விநியோகிக்க வேண்டும் என்பதற்காகவே, 35,750 ரேஷன் கடைகளுக்கும், “பாயின்ட் ஆப் சேல்” எனப்படும் விற்பனை முனைய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. காரணம், கார்டுதாரர்கள் வாங்காத பொருட்களை, சில ஊழியர்கள் வாங்கியது போல் கருவியில் பதிவு செய்து முறைகேடு நடப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், பொருட்கள் வழங்கிய உடனேயே, கார்டுதாரர்களின் செல்போன் நம்பருக்கு அனுப்பப்படும் மெசேஜ் பலர் கவனிப்பதில்லையாம். அதனால்தான், கைரேகை பதிவு மட்டுமின்றி, ரசீதும் தரும், “பிரிண்ட்டர்” வசதியுடன் ஒருங்கிணைந்த புதிய கருவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம்.

இதுவரை, 2,750 கடைகளுக்கு புதிய கருவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 1,000 கடைகளுக்கு வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. எப்படியும், விரைவில் பணிகள் அனைத்தும் முடிந்து, அனைத்து கடைகளிலும் இது பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கும் போது, ரசீதை பார்த்து என்னென்ன வழங்கப்பட்டன என்பதை அறிந்து கொள்ள முடியும்.

Read More : முன்கூட்டியே தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை..!! இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை..!!

Chella

Next Post

வெஸ்ட் நைல் வைரஸ்!… மைசூருக்கு ஹை அலெர்ட் விடுத்த சுகாதாரத்துறை!… உஷார் நிலையில் அதிகாரிகள்!

Thu May 16 , 2024
West Nile virus: கேரளாவில் மேற்கு நைல் காய்ச்சல் தீவிரமடைந்து வருவதையடுத்து, கர்நாடகா-கேரள எல்லையான பாவாலி செக்போஸ்ட்டில் அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில், வெஸ்ட் நைல் வைரஸால் (WNV) 12 பேருக்கு மேற்கு நைல் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மைசூர் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர எச்சரிக்கையுடன் உள்ளனர். எச்.டி.கோட் தாலுகாவின் பாவாலி செக்போஸ்ட்டில் கர்நாடகா-கேரள எல்லையில் அதிகாரிகள் கண்காணிப்பை […]

You May Like