’ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க முடியாது’..!! முதலமைச்சர் அதிரடி..!!

ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி படத்தை வைக்க முடியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமர் படங்களை வைக்க வேண்டும் என பாஜகவினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ரேஷன் கடைக்கு வரும் அரிசி, மத்திய அரசால் மானியமாக கொடுக்கப்படுவதால் பிரதமர் படம் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கேரளாவில் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் பதாகைகளை வைக்க முடியாது என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மேலும், ரேஷன் கடைகளை முன்பு பிரதமர் படம் அடங்கிய பதாகைகளை நிறுவ சொல்லி மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ள நிலையில், இது ஒரு தேர்தல் ஸ்டண்ட் என்றும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க இருப்பதாகவும் சட்டப்பேரவையில் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளிலும் பிரதமர் படத்தை வைக்க முடியாது என திமுகவினர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser6

Next Post

ரூ.6,000 வெள்ள நிவாரணம் உங்களுக்கு இன்னும் வரவில்லையா..? மாநகராட்சி ஆணையர் சொன்ன குட் நியூஸ்..!!

Tue Feb 13 , 2024
சென்னையில் மழை வெள்ளத்ததால் பாதிக்கப்பட்டு இதுவரை நிவாரணத்தொகை கிடைக்காதவர்களுக்கு விரைவில் ரூ.6,000 கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ”சென்னையில் உள்ள விளையாட்டு மைதானங்களில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் மாற்றப்பட உள்ளது. இதற்காக விளையாட்டு மைதானங்களை எஸ்.டி.எ.டி. என்ற மாநில அரசின் அமைப்பிடம் ஒப்படைத்துள்ளோம். தற்போது சென்னை மாநகராட்சியில் 863 பூங்காக்கள் உள்ளது. மேலும், […]

You May Like