"என் வயித்துல அன்பு ஓட குழந்தை வளருது சார்" உண்மையை போட்டுடைத்த ரோஜா…! இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா..? “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்…! 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்..! பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா? “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..! அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்.. “ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்.. தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்! 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா..? தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்..

திடீரென தனது ஓய்வை அறிவித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி… என்ன நடந்தது…?

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையின் போது சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெரும் நிலையில் இருந்தார். அந்த உலகக்கோப்பை தான் அவருக்கு கடைசி உலககோப்பையாக இருந்தது. இறுதிப்போட்டியில் தோனியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி அந்த வருடம் கோப்பையை வென்றது. இந்திய அணி 28 வருடங்களுக்கு பின்னர் உலகக்கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. டெண்டுல்கருக்கு அது கடைசி ஆட்டம் என்பதால் அவரை தோலில் தூக்கிக் கொண்டு மைதானத்தை சக வீரர்கள் வலம் வந்தனர். அதே போல் கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் வென்று இந்திய அணி தோனியுடன் மைதானத்தை வலம் வர வேண்டும் என்று தங்களது விருப்பங்களை பல்வேறு வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர் இந்திய அணியின் ரசிகர்கள்.

2sports interesting facts fr

டி20 உலகக்கோப்பை(2007), ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை(2011), சாம்பியன்ஸ் டிராபி(2013) என மூன்று ஐசிசி கோப்பைகளை தோனி தலைமையில் இந்தியா குறுகிய காலகட்டத்தில் வென்று சர்வதேச அரங்கில் சாதித்தது.

கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி வென்றது. அதற்கு முன்னர் கோலி தலைமையில் ஆன இந்திய அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோத இருந்தன. இறுதிப்போட்டிக்குள் முதல் அணியாக நுழையப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டியைக் காண மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் அன்றைய தினம் ரசிகர்கள் நிரம்பி வழிந்தனர்.

ms dhoni 1200

அந்த போட்டி நடக்க இருந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதாவது ஜூலை 7 அன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது பிறந்தநாள் அன்று இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனியைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். அந்த போஸ்டில் தோனியுடன் ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பது போன்ற ஒரு காணொளியை பதிவிட்டு ” உங்களுடன் செலவிடும் ஒவ்வொரு நாளும் ஏதாவது கற்றுக்கொள்ளவும் மென்மேலும் வளரவும் உதவும் வாய்ப்பாக உள்ளது. என்னுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய ரோல் மாடல்களில் ஒருவர் நீங்கள். அதற்கு நன்றி” என பதிவிட்டிருந்தார். இதற்கு 15 லட்சத்துக்கும் மேலான ரசிகர்கள் லைக் செய்திருந்தார்கள்.

நியூசிலாந்து எதிரான அந்த போட்டியில் மழையின் காரணத்தால் போட்டி சிறிது நேரம் தடைபட்டு மறுநாளும் போட்டி தொடர்ந்தது. 240 ரன்கள் இலக்கை கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு 24 ரன்கள் எடுத்து இருந்து முதல் பத்து ஓவரிலேயே நான்கு விக்கெட் விழுந்தது.. அதன்பின்னர் ரிஷப் பந்த் அவுட் ஆக, 23-வது ஓவரில் தோனி களத்தில் நுழைந்தார். அப்போது இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இன்னும் 169 ரன்கள் எடுக்க வேண்டுமென்ற நிலை. கைவசம் 5 விக்கெட்டுகள்தான் இருந்தது. ஹர்டிக் பாண்ட்யாவும் தோனியும் இணைந்தனர். 62 பந்துகளை சந்தித்து 32 ரன்கள் எடுத்திருந்த ஹர்டிக்கும் அவுட் ஆனார்.

மீதம் இருந்த 19 ஓவரில் 146 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கடினமான சூழ்நிலையில் இருந்த இந்திய அணி தோனி மற்றும் ஜடேஜாவின் கூட்டணியால் வெற்றியில் பக்கத்தை நோக்கி ஆட்டம் நகரத் துவங்கியது. சிக்ஸர்களை விளாசி வந்த விலையில் ஒரு கட்டத்தில் ஜடேஜாவும் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் தோனியால் தைரியத்தைக் கொண்டது இந்தியா. ஆனால் 49 ஆவது ஓவரில் மூன்றாவது பந்தில் சற்றும் எதிர்பாராமல் தோனி ரன் அவுட் ஆனார். அதோடு இந்திய அணியின் கதையும் முடிந்தது. 72 பந்தில் 50 ரன்கள் எடுத்த தோனி மிகவும் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். 2015 உலகக்கோப்பை அரை இறுதியில் தோனி ரன் அவுட் ஆனார், அதன் பின்னர் 14 பந்துகளில் இந்தியாவின் கனவு தகர்ந்தது.

889256 ms dhoni run out in 2019 wc semi finals

பல கோப்பைகளை நமக்கு அள்ளி கொடுத்து நம் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த தோனிக்கு அன்று நடந்த போட்டியே சர்வதேச ஒரு நாள் போட்டியில் கடைசி ஆட்டமாக அமைந்தது. இனி அந்த உடையில் மறுஅடியும் அவரைக் காண முடியாது என்பது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்திய அணிக்கான வருடாந்திர ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் தோனி நீக்கப்பட்டார்.

கடந்த நவம்பர் மாதம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ”டி20 உலகக் கோப்பையில் தோனி இடம்பெறுவாரா இல்லையா இப்போது உடனடியாக சொல்லமுடியாது. அவருடைய ஐபில் ஆட்டம், கீப்பிங் மற்றும் மற்ற வீரர்களின் கீப்பிங் பொறுத்தே அதை முடிவெடுக்க முடியும் எனக் கூறிருந்தார். ”தோனியின் எதிர்காலம் தெளிவாக இருக்கிறது. அணி நிர்வாகம், கிரிக்கெட் வாரியம், தோனி என மூன்று தரப்பும் வெளிப்படையாக பேசி முடிவுகள் எடுத்துள்ளன. தோனி மாதிரி ஒரு மிகப்பெரிய விளையாட்டு வீரர் தொடர்பான விஷயங்களை அறைக்கு வெளியே பொதுவில் பேசமுடியாது,” என பிசிசிஐ தலைவர் கங்குலி கடந்த ஆண்டு இறுதியில் ஒரு பேட்டியின் போது தெரிவித்திருந்தார்.

936841 knyciedhhj 1534481432

தன்னை விட்டு நகர்ந்துச் செல்ல அணி தயாராக இருக்கும்போது, கிரிக்கெட் உலகில் தன்னை மீண்டும் நிரூபித்து அணிக்குள் வருவாரா அல்லது சர்வதேச கிரிக்கெட் அத்தியாயத்துக்கு ஏற்கனவே முடிவுரை எழுதிவிட்டாரா என கிரிக்கெட் உலகில் கேள்வி எழுந்தது. கொரோனா காரணமாக கிரிக்கெட் போட்டிகள்
நடக்காமல் இருந்தது. டி20 உலகக்கோப்பையும் நாள் தள்ளிபோடப்பட்டுள்ளது. தற்சமயம் அவர் இந்த சூழலில் தனது ஓய்வை வெளியிட்டுள்ளார்.

அதே சமயம் தோனிக்கு உரிய மரியாதை வழங்கப்படும் என்பதை பிசிசிஐ தெளிவுபடுத்தியது. குறிப்பாக கங்குலி ”நான் இருக்கும்வரை அனைவரும் உரிய முறையில் மதிக்கப்படுவர்” எனத் தெரிவித்திருந்தார்.

1newsnationuser6

Next Post

அடுத்த ஷாக் கொடுத்த நித்தியானந்தா.. கைலாசா நாட்டின் கரன்சி இப்படி தான் இருக்குமாம்.! புகைப்படம் வெளியானது..

Sun Aug 16 , 2020
கைலாசா நாட்டின் ரூபாய் நோட்டின் புகைப்படம் வெளியாகி உள்ளது. கொரோனாவிற்கு முன்பு வரை, தான் பேசும் வீடியோக்கள் மூலம் தவறாமல் செய்திகளில் இடம்பிடித்த வந்த நித்தியானந்தா, கைலாசா என்ற தனிநாட்டை உருவாக்க போவதாக அறிவித்தார். இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான அவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிய முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். ஆனால் நித்தியானந்தாவோ, கைலாசா நாட்டிற்கான பணிகளில் பிசியாக இருந்து வருகிறார். அந்தவகையில் கைலாசா நாட்டின் […]
கைலாசா

You May Like