கடந்த மாதம் கராச்சியில் விபத்துக்கு உள்ளான பயணிகள் விமான விபத்து, விமானத்தை இயக்கிய விமானி மற்றும் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களின் கவனக்குறைவே காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த மே 22 ஆம் தேதி பயணிகள் விமானம் ஒன்று லாகூரிலிருந்து, கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த சமயத்தில் கட்டுக்கடங்காமல் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. அதில் 97 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இருவர் மட்டுமே அதிஷ்டவசாமாக உயிர் தப்பினர். இந்த கோர விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் குலாம் சர்வார் கான் விமானி மற்றும் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்கள் நெறிமுறையை கைக்கொள்ள தவறிவிட்டதால் இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் சர்வதேச விமான நிலையத்துக்கு சொந்தமான இந்த ஏர்பஸ் 320 ரக விமானத்தில் எந்த பழுதும் இல்லை எனவும் விமானம் 2014 லிருந்து பயன்பாட்டில் உள்ளது. கடந்த நவம்பர் மாதம் ஆண்டுதோறும் நடைபெறும் தரக்கட்டுப்பாடு சோதனையும் செய்யப்பட்டுள்ளது எனவும் குறிபிட்டுள்ளார்.

இது குறித்த விசாரணையில் தெரியவந்துள்ளது என்வென்றால் முதலில் விமானி லேண்டிங் கியரை சரியாக செயல்படுத்தாததால் விமானம் ஓடுபாதையிலிருந்து புறப்படும் முன்பே கோளாறு ஏற்ப்பட்டுள்ளது. இதனை விமானிகள் தெரியப்படுத்தவில்லை. இரண்டாம் முறை தரை இறங்கும் போது விமானிகள் தங்கள் குடும்பம் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை குறித்து விவாதித்துக் கொண்டிருந்துள்ளனர். இது ரெக்கார்டிங் பதிவுகளில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.