
பீகார், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால், அம்மாநிலத்திற்கு ரெட் அலாட் எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துவரும் நிலையில், உத்திரப்பிரதேசம், பீகார், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பேய் மழை பெய்துவருகிறது. நேற்று பீகார், ஜார்கண்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்துவரும் நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சூறாவளி காற்றும் வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதன் காரணமாக குடிநீர் சப்ளை, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்னல் தாக்கி ஒரே நாளில் 83 பேர் பலியாகினர்.

இந்தநிலையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால், பீகார், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ரெட் அலாட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மீட்புப்படைகளை அங்கு தயார் நிலையில் வைக்கவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
.