பதினைந்து மாவட்டங்களுக்கு ’’சிவப்பு எச்சரிக்கை’’!!

பதினைந்து மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடலில் தொடர்கின்றது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக மழை அதிகரித்து தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி 10, 12 தேதிகளில் நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால்ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், செங்கல்பட்டு விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும்சென்னை செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுமுறை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 10 முதல் 12ம் தேதிவரை வளைகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள குமரிக்கடல் பகுதிகளில் தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் இடையிடையே 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Post

வீட்டுக்குள்ள மட்டும்தான் இப்படி..!! ஆனா, வெளியே..!! பிக்பாஸ் விக்ரமனின் உண்மை முகம்..!!

Thu Nov 10 , 2022
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருப்பவர்தான் விக்ரமன். அரசியல், பத்திரிகையாளர் போன்ற அடையாளத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், இப்போது ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார். ஆரம்பத்தில் அவ்வளவாக கவனிக்கப்படாமல் இருந்த விக்ரமன், தற்போது தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார். நிச்சயம் இவர் இந்த பிக்பாஸ் டைட்டிலை வெல்வார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், விக்ரமன் பற்றிய ஒரு அதிர்ச்சியான […]
அது ஒரு ’நரி’ கூட்டம்..!! பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து புட்டு புட்டு வைத்த ராபர்ட் மாஸ்டர்..!!

You May Like