சியோமி நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் பல்வேறு மேம்பட்ட சிறப்பம்சங்களை கொண்ட, ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அமேசான், மி.காம் போன்ற தளங்களில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

கடந்த 6ம் தேதி வெளியான ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x2400 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது.
குறிப்பாக, 2ஜிகா ஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 உடன் MIUI 11 ஆதரவு இருப்பதால் கையாளும்போது அதன் இயக்கம் அதிவேகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்+ 8எம்பி செகன்டரி சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் பல ஆதரவுகள் இவற்றுள் அடங்கியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.குறிப்பாக வெள்ளை, கருப்பு,வெள்ளை உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும்.

ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5020எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல், எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.
புளூடூத்,என்எப்சி, வைஃபை 802.11,யூ.எஸ்.பி டைப்-சி, 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் மேலும் இந்த சாதனங்களின் விலை மதிப்பு(இந்திய மதிப்பில்) 4ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் விலை ரூ.13,999-ஆகவும், 6ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் விலை ரூ.16,999-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.