ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..?

கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளுக்கு தடை.. உலகிடம் இருந்து எதை மறைக்கிறது சீனா..?

கொரோனா வைரஸ் குறித்து ஒட்டுமொத்த உலகமே கவலையில் ஆழ்ந்திருக்கும் நிலையில், சீனாவின் உண்மை முகம் படிப்படியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆம். ஷி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு, கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்பது குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கு தடை விதித்துள்ளது.. கொரோனா விவகாரத்தில் பல உண்மைகளை சீன மறைப்பதாக பல்வேறு உலக நாடுகள் சந்தேகம் எழுப்பியுள்ள நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கை சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது..

china president xi jinping

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் உஹான் நகரத்தில் தான் கொரோனா வைரஸ் முதன்முதலில் பரவத் தொடங்கியது. ஆனால் இந்த தொற்று தங்கள் நாட்டில் இருந்து தான் பரவியது என்ற செய்தியை உறுதி செய்யும் வகையில் சீனப் பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை சீன அரசு நீக்கியுள்ளது. இதன் காரணமாக கொரோனா நோய் தோன்றிய உண்மையை சீனா மறைக்க முயல்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்நாட்டின் உஹான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரென்மின்(Renmin) மருத்துவமனை வெளியிட்ட ஆராய்ச்சி முடிவுகளை நீக்கியுள்ளது. தங்கள் ஆராய்ச்சி முடிவுகளுக்கு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஒப்புதல் தேவை என்பதால் தாங்கள் அந்தப் பதிவை நீக்கியதாகவும் அந்த மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Coronavirus

இதேபோல் சீன புவிஅறிவியல் பல்கலைக்கழகம், ஷாங்காயில் உள்ள Fudan பல்கலைக்கழகம் ஆகியவையும், கொரோனா தொடர்பான ஆய்வுக் கட்டுரையை தங்கள் வலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளன. கொரோனா குறித்த ஆய்வுக் கட்டுரைகள் அல்லது ஆய்வு முடிவுகளை வெளியிட சீன அரசு புதியக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதனை வெளியிட வேண்டும் என்றால் பலநிலை ஒப்புதல் பெற வேண்டும் என்றும் சீனாவின் கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து கட்டுரைகளும், ஆய்வுக்கு உட்படுத்தப் பிறகே வெளியிடப்படும். கொரோனாவின் உண்மைத் தன்மையை மறைக்கவே சீனா இந்த தடையை விதித்துள்ளது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

xi jinping

பயோ வெப்பன் எனப்படும் உயிரி ஆயுதங்களை சீனா உருவாக்கி வரும் நிலையில், கொரோனாவும் அந்த ஆயுதங்களில் ஒன்றாக இருக்கக் கூடும் என்று ஏற்கனவே பல நாடுகளின் உளவுத்துறைகள் சந்தேகம் எழுப்பியுள்ள நிலையில், தற்போது கொரோனா தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளுக்கு சீனா விதித்துள்ள தடை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

1newsnationuser1

Next Post

செய்தியாளர்களை சந்திக்காதது ஏன்..? அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிய காரணம் இது தான்..

Wed Apr 15 , 2020
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை வழங்கிய அமைச்சர் விஜயபாஸ்கர், தான் ஏன் செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர் கொரோனா பாதிப்பு குறித்த பல்வேறு தகவல்களை வெளியிட்டார். மேலும் “ தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்பு எண்ணிகை 1204 லிருந்து 1242 ஆக […]
vijaya bhaskar 1

You May Like