மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…! துடைப்பத்தைச் சரியாக பயன்படுத்தினால் இவ்வளவு நன்மையா ? தெரிந்து கொள்ளுங்கள்….

“அவரது காதலி அதிக போதை மருந்துகளை கொடுத்தார்..” சுஷாந்த் சிங் பாதுகாவலர் வெளியிட்ட மேலும் பல அதிர்ச்சி தகவல்கள்..

சுஷாந்த் சிங்கின் காதலி அவருக்கு அதிக போதை மருந்துகளை கொடுத்ததாகவும், அதனால் அவர் எப்போதும் மயக்க நிலையிலேயே இருந்ததாகவும் அவரின் பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

சுஷாந்த்

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில், அவரது குடும்பத்தினர், நெருக்கமானவர்கள் புதிய தகவல்களை கூறிவருகின்றனர். இதனால் இந்த வழக்கில் நாளுக்கு நாள் புதிய திருப்பங்கள் ஏற்படுகிறது. அந்த வகையில் சுஷாந்தின் பாதுகாவலர், பிரபல ஆங்கில தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். சுஷாந்திற்கு அவரது காதலி ரியா சக்ரபர்தி போதை மருந்துகளை தொடர்ந்து கொடுத்து வந்ததாகவும், இதனால் அவர் எப்போதும் மயக்கி நிலையிலும், தூங்கிக் கொண்டும் இருந்தாதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சுஷாந்திற்கு மருந்துகளை வாங்குவதற்காக தன்னை மருந்து கடைக்கு ரியா அனுப்பியதாகவும், அதனால் பல நேரங்களில் கடை உரிமையாளர்கள் தன்னை சந்தேகத்துடன் பார்த்ததாகவும் சுஷாந்தின் பாதுகாவலர் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி அந்த மருந்துகளை சுஷாந்திற்கு கொடுக்கும்போது, அவர் பெரும்பாலான நேரம் தூங்குவார் என கூறியுள்ளார். மேலும் ஐரோப்பா பயணத்திற்கு பிறகு, சுஷாந்த் மீண்டும் நோய்வாய்ப்பட்டார் என்றும், அவர் எப்போதும் படுக்கையில் இருந்தார் என்றும் கூறினார். அதற்கு முன்பு எப்போதும் நீச்சல், ஓடுதல், ஜிம்மிங் என ஏதாவது செயலில் ஈடுகொண்டிருப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.

916522 ssr rhea chakraborty

ரியா மற்றும் அவரது தந்தை, சகோதரர் ஆகியோர் சுஷாந்தின் வீட்டிற்கு அடிக்கடி தங்கள் நண்பர்களை பார்ட்டிக்கு அழைத்து, அவரின் பணத்தை பகட்டாக செலவு செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார். எனினும் அந்த பார்ட்டிகளில் சுஷாந்த் கலந்து கொள்ள மாட்டார் எனவும் அவர் கூறினார். அதுமட்டுமின்றி, ரியா மீது சுஷாந்தின் தந்தை சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை தான் எனவும் சுஷாந்தின் பாதுகாவலர் தெரிவித்தார்.

இதனிடையே சுசாந்தின் பயிற்சியாளர் சமீ அகமது என்பவரும், ரியா, போதை மருந்துகளை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். எந்தவொரு ஆலோசனையும் இல்லாமல் ரியா அவருக்கு பரிந்துரைக்கப்படாத சில மருந்துகளை வழங்குவதாக சமீ தெரிவித்தார். போதை மருந்து கொடுக்கும் அளவை ரியா நிர்ணயித்ததாகவும், அவர் தான் சுஷாந்தை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றார் என்றும் பயிற்சியாளர் குற்றம் சாட்டினார். ரியாவுடனான தொடர்புக்கு பிறகு சுஷாந்தின் நடத்தையில் மாற்றங்கள் ஏற்பட்டதையும் தான் கவனித்ததாக தெரிவித்தார்.

sushant sing rhea

34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் 14-ம் தேதி, மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பான வழக்கை பீகார் போலீசார் மற்றும் மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரை சுமார் 40 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. முன்னதாக சுஷாந்தின் தந்தையும், ரியா மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

1newsnationuser1

Next Post

இளைஞர் மீது பசு பாதுகாவலர்கள் நடத்திய கொடூர தாக்குதல்.. போலீஸார் முன்னிலையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..

Sat Aug 1 , 2020
மாட்டிறைச்சியை கொண்டு செல்வதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை போலீசார் முன்னிலையில் பசு பாதுகாவலர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள பட்ஷாபூர் என்ற கிராமத்தில் சென்று கொண்டிருந்த ஒரு லாரியை நேற்று காலை பசு பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். அந்த லாரியில் மாட்டிறைச்சி கடத்தப்படுவதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், லாரியை ஓட்டிய லக்மேன் என்ற இளைஞர் மீது பசு பாதுகாவலர்கள் கும்பல் தாக்குதல் […]
cow vigilants

You May Like