இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்வு …

இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ரிஷி சுனக்கின் குடும்பத்தினர் 2 தலைமுறைகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு சென்று அங்கேயே வாழ்ந்து வருகின்றனர். அவரது தாத்தா பாட்டி பஞ்சாபை பூர்விகமாக கொண்டவர்கள். 1960களில் கிழக்கு ஆப்பிரிக்காவில் வசித்தவர்கள் பிரிட்டனுக்கு சென்றார்கள். இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் தான் ரிஷி பிறந்தார்.
ரிஷியின் தந்தை மருத்துவராவார். அவரது அம்மா மருத்துக்கடை நடத்தி வருகின்றார். இங்கிலாந்தில் பிறந்தாலும் ஆங்கிலம் தவிர அவருக்கு இந்தி , பஞ்சாபி மொழிகள் கற்றுக்கொடுக்கப்பட்டது.
மொழிகள் மட்டுமின்றி இந்திய கலாச்சாரத்தின் ஆணி வேரான மதமும் அவரை பின்பற்ற வைத்துள்ளனர். ஒரு பெருமைமிக்க இந்து என்றே பல முறை ரிஷி குறிப்பிட்டுள்ளார். அவர் எம்.பி. ஆனதும் , பகவத் கீதையின் மீது சத்தயி பிரமாணம் செய்துள்ளார். இதுவே சாட்சி என பலராலும் பேசப்படுகின்றது.
ரிஷி சுனக்கின் மனைவி இன்போசிஸ் சுதாமூர்த்தி-நாராயணன் மூர்த்தியின் மகளாவார். மனைவி அக்‌ஷிதா பெங்களூருவில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேல்படிப்பை கலிபோர்னியாவில் பொருளாதாரம் தொடர்பான பட்டப்படிப்பை முடித்துள்ளார். லாஸ் ஏஞ்சலஸில் ஃ பேஷன் டெக்னாலஜி முடித்துள்ளார்.
2009 ம் ஆண்டு ஸ்ட்ண்ட்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தபோது ரிஷி சுனக்கை காதலித்துள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பெங்களூருவில் நடைபெற்ற திருமணத்தில் அரசியல் பிரமுகர்கள் , தொழிலதிபர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் பங்கேற்றனர்.
லிஸ்ட்ரஸ் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சுனக் மன்னர் சார்ல்ஸை சந்திக்கின்றார். இன்று மாலை பதவி ஏற்பு நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது. முறைப்படி ரிஷி சுனக் நியமனம் செய்யப்படுவதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Next Post

நயன்தாராவுக்கு பிரச்சனை மேல் பிரச்சனை ...

Tue Oct 25 , 2022
நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தைகள் விவகாரத்தில் விதிகளை மீறியதாக கூறப்பட்ட புகாரில் தற்போது விதிகளை மீறியது உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மருத்துவமனை நிர்வாகத்திடம் உரிய விளக்கம் கேட்கப்பட உள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகின்றது. இந்து விளக்கம் திருப்திகரமாக இல்லை எனும் போது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் நயன்-விக்கி […]

You May Like