ரோபோ சங்கர் மருமகனின் மறுபக்கம்! குவியும் பாராட்டுக்கள்!!

நடிகர் ரோபோ ஷங்கரின் மகளும், நடிகையுமான இந்திரஜா சங்கருக்கும் கார்த்திக்கும் கடந்த 24-ம் தேதி மதுரையில் கோலாகலமாக நடந்தது. இதை தொடர்ந்து சென்னையில் பிரம்மாண்ட திருமண வரவேற்பு நடந்தது.. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

இந்திரஜா திருமணம் செய்துகொண்ட கார்த்திக், ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவின் சொந்த தம்பி என கூறப்பட்ட நிலையில், ஆதரவற்ற தன்னை பிரியங்கா தான் தத்தெடுத்து வளர்த்தார் என்று கார்த்திக் பேசியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதுமட்டுமல்ல தான் சொந்தமாக கட்டிய அன்பு இல்லம் என்ற வீட்டில் 27 ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கார்த்திக் செய்து வருகிறார்.

மேலும், சமூக சேவை செய்வதில் ஆர்வம் கொண்ட கார்த்திக், பிரபல யு டியூப் சேனல் ஒன்றுக்கு அளிட்ட பேட்டியில், அன்பு இல்லத்திற்கு வந்தால் எப்போதும் சாப்பாடு இருக்கும். கீரை விற்பவர்கள், முடியாதவர்கள் என யார் வேண்டுமானாலும் இங்கு சாப்பிடலாம். இதே மாதிரி கடைசி வரை சேவை செய்ய வேண்டும் என்பதே என் ஆசை” என்று கூறினார்.

கார்த்திக்கின் வீட்டில் குழந்தைகள் படிப்பதற்கான அறை, புத்தகங்கள் வைப்பதற்கான அறை, ஓய்வெடுக்கும் அறை என பல அறை இருக்கிறது. தனக்கு குழந்தைகள் பிறந்தாலும் அவர்களுக்கு கூட இந்த வீடு இருக்குமா என்று தெரியாது எனவும் இந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு இந்த வீடு இருக்கும் என்று உறுதிபட தெரிவித்தார். தனது 6 வயதில் தந்தையை இறந்த தனக்கு இந்த சமூகம் நிறைய உதவிகளை செய்துள்ளதால் இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த உதவிகளை செய்து வருகிறார்.

தற்போது அவருடன் இந்திரஜாவும் இணைந்துள்ளார். இந்திரஜாவும் தற்போது குழந்தைகளுக்கு உணவு தயார் செய்து, குழந்தைகளை அன்புடன் கவனித்து வருகிறாராம்.. கார்த்திக் – இந்திரஜாவின் சேவை தொடர பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

Baskar

Next Post

பெற்றோர்களே உஷார்…! ஸ்மார்ட்போனால் குழந்தைகளின் மூளை பாதிக்கும் அபாயம்…!

Wed Apr 3 , 2024
இன்றைய காலக்கட்டத்தில் உலகமே மொபைல், கணினி மற்றும் ஸ்மார்ட்போன் மயமாகிவிட்டது. இந்த ஸ்மார்ட்போன் பயன்பட்டால் குழந்தைகளுக்கு மூளையில் பாதிப்பு ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. கணினி, மொபைல் போன்றவைகளின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் கண் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றது. அதிலும் பெரியவர்கள் மட்டுமின்றி சிறியவர்களும் அதிகமாகவே பாதிக்கப்பட்டு வருகின்றனர். மொபைல் போன்களுக்கு அடிமையாவதால் பார்வை குறைபாடு, கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்து. கண்களை எவ்வாறு பாதுகாப்பது? குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு மொபைல்போன் கொடுக்காமல் […]

You May Like