முடி அடர்த்தியாக கருகருவென வளர இந்த ஒரு எண்ணெய் போதும்.!

பொதுவாக தலை முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர வேண்டும் என்பது பெண்கள் எல்லோருக்கும் பொதுவான ஆசையாக இருந்து வருகிறது. இவ்வாறு தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர்வதற்கு பராமரிப்பு மிகவும் அவசியமாக இருந்து வருகிறது. முடியை சரியான அளவிற்கு பராமரித்தால் அதற்கேற்றார் போல் நன்றாக வளரும்.

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மாசு, உணவு பழக்கம் தூக்கமின்மை, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை போன்ற பல்வேறு காரணங்களினாலும் முடி உதிர்தல், முடி நரைத்தல், ஆண்களுக்கு இளம் வயதிலேயே முடி உதிர்ந்து வழுக்கை தலையாகுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

மேலே குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு  மருத்துவ முறைகளிலும், வீட்டு வைத்திய முறைகளிலும் பலவிதமான குறிப்புகளை பின்பற்றி செய்து வந்திருப்போம். ஆனால் அதற்கான தீர்வாக எதுவும் சரியாக இருந்திருக்காது. தற்போது சித்த வைத்திய முறைப்படி கூறப்பட்ட இந்த ஒரு எண்ணெய் போதும் முடி அடர்த்தியாக வளர்வதற்கு என்று சித்த மருத்துவர் தேனி சரவணகுமார் என்பவர் கூறியிருக்கிறார்.

அதாவது ரோஸ்மேரி விதைகளில் இருந்து பக்குவமாக காய்ச்சப்பட்டு எடுத்த ரோஸ்மேரி ஆயில் முடி சம்பந்தப்பட்ட அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கிறது. எஸ்ஷென்சியல் எண்ணெய்யான ரோஸ்மேரி ஆயில் ஒரு வகையான வாசனையுடன் இருப்பதால் தலையில் பேன், பொடுகு தொல்லையை நீக்கி முடியை அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர வைக்கிறது.

1newsnationuser5

Next Post

பாம்புகள் தூங்கும் நேரம் பற்றி கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்!…

Thu Feb 8 , 2024
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதில் பாம்புகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. பாம்புகளைப் பற்றி நாம் கேள்விப்பட்ட கதைகள் 90% சதவீதம் கட்டு கதைகள். குறிப்பாக சினிமாக்களில் காட்டப்படும் பாம்புக்கதைகளை நம்பவேண்டாம். உலகம் முழுவதும் 3600 வகையான பாம்புகள் இருக்கின்றன. இதில் இந்தியாவில் மட்டும் 230 வகை பாம்புகள் உள்ளன. இதில் 62 வகை பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாகும். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு […]

You May Like