பேண்ட் அணியாததால் ரூ.500 அபராதம்… சரமாரி கேள்வியால் போலீஸை மடக்கிய ரிப்போர்ட்டர்…!!

லாரி ஓட்டுனர் சீருடை பேண்ட் அணியவில்லை என்ற காரணத்திற்காக ரூ.500 அபராதம் விதித்த டிராபிக் போலீஸை சரமாரியாக கேள்வி கேட்ட சம்பவம் வைரலாகி வருகின்றது.

சென்னையில் வாகன சட்டங்களை மீறியதற்காக பல்வேறு வாகன ஓட்டிகளிடம் டிராபிக் போலீஸ் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் லாரி ஓட்டுனரை அழைத்து டிராபிக் போலீஸ் ஒருவர் அபராதம் வசூலித்துள்ளார். சீருடைக்கு பேண்ட் அணியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக  ரூ.500 அபராதம் விதித்துள்ளார் அந்த போலீஸ்.

இரவு முழுவதும் கண் விழித்து வேலை பார்த்தால்தான் எனக்கு அந்த ரூ.500 கிடைக்கும் எதற்காக எனக்கு அபராதம் விதித்தீர்கள் என லாரி ஓட்டுனர் ஒருவர் கேட்க ’’டேய் போடா ’’ என விரட்டியடிக்கின்றார் அந்த போலீஸ். நான் உனக்கு ரூ.4500 அபராதம் விதித்திருக்க வேண்டும் ஆனால், ரூ.500 விதித்தது தப்பா போச்சு என கடும் காட்டமான வீடியோ சமூக வலைத்தலத்தில் வைரலாகி வருகின்றது.

இதை நேரில் பார்த்த தொலைக்காட்சி ரிப்போர்ட்டர் எதற்காக நீங்கள் அபராதம் விதித்தீர்கள் என கேள்வி கேட்டார். சாமானிய ஓட்டுனர் பேண்ட் அணியவில்லை என்று அபராதம் விதிக்கின்றீர்கள்.. நீங்கள் பார்க்கிங் அல்லாத இடத்தில் வாகனங்களை நிறுத்தியுள்ளீர்களே உங்களுக்கு யார் அபராதம் விதிப்பது?. எந்த லாரி ஓட்டுனர் சீருடை அணிந்து வாகனம் ஓட்டுகின்றார்கள்? என அடுக்கடுக்காக சரமாரி கேள்வி கேட்டார். நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தக் கூடாது என கூறும் நீங்கள் வாகனத்தை எங்கே நிறுத்தியுள்ளீர்கள் என தெரிகின்றதா? உங்கள் காவலர் எங்கே வாகனத்தை மறிக்கின்றார் என தெரிகின்றதா? கனரக வாகனத்தை பிற வாகனங்களுக்கு விபத்து ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை நிறுத்துவது ஏன் என சரமாரி கேள்வி கேட்க போலீஸ்-உம் பம்மி பம்மி பதில் அளிக்கின்றார்.

இது போல போலீசார் சாமானிய மக்களிடம் மட்டுமே கை வரிசை காட்டுகின்றார்கள். லாரி ஓட்டுனரிடம் அதே போலீஸ்தான் ’’போடோ டேய்’’ என்றார். மக்களிடம் இந்த பாரபட்சம் ஏன் எனவும் கேள்விகள் எழுந்துள்ளது. !!

Next Post

71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!

Sun Nov 6 , 2022
ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி சூப்பர் 12 சுற்று போட்டியில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் 15 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இணை ஆட்டக்காரராக களம் இறங்கிய கே.எல்.ராகுல் அரை சதம் […]

You May Like